Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பரிசுத்தாவி நீர் வாரும்

பல்லவி

பரிசுத்தாவி நீர் வாரும்!-திடப்
படுத்தல் பெறுவோர்க் கருள் தாரும்!-இன்று

அனுபல்லவி

அருளினைப் பெருக்கும் அக்கினி மயமே
ஆவியின் நற்கனி நல்குமா தூயமே. – பரி

சரணங்கள்

1. செயல்குண வசனத் தீதுகள் போக,
திருச்சபை யதிலிவர் பூரணராக,
ஜெயமொடு பேயை எதிர்த்துக் கொண்டேக,
ஜெபதப தியானஞ் செய்வதற்காக. – பரி

2. நற்கருணைதனை நலமுடன் வாங்க,
நாளொரு மேனியாய் ஆவியி லோங்க,
சற்குணராய் இவர் சபையைக் கை தாங்க,
சகல தீதான பேதங்களும் நீங்க. – பரி

3. அஞ்ஞானங்க ளோடிவர் சமர்புரிய,
அருண்மறை யதினாழங் களையறிய,
நெஞ்சினில் அன்பு கொழுந்துவிட் டெரிய,
நின்னடியாரிவ ரென்பது தெரிய. – பரி

4. பக்தியுந் தாழ்மையுமா யிவர் உய்ய,
பரிசுத்தமான ஜீவியஞ் செய்ய,
நித்தமுங் கிருபையின் கனி கொய்ய,
நிலைவரமாய் இவராவியில் துய்ய. – பரி

5. தினமறை யோதி ஜெபித்து மன்றாட,
திருச்சபை யதின்ஐக் கியத்தினிற் கூட,
உணர்வோடு தொழுது கீதங்கள் பாட,
உள்ளந் திருந்து ஜீவாறுகளோட. – பரி

Parisuthaavi Neer Vaarum – பரிசுத்தாவி நீர் வாரும் Lyrics in English

pallavi

parisuththaavi neer vaarum!-thidap
paduththal peruvork karul thaarum!-intu

anupallavi

arulinaip perukkum akkini mayamae
aaviyin narkani nalkumaa thooyamae. – pari

saranangal

1. seyalkuna vasanath theethukal poka,
thiruchchapai yathilivar pooranaraaka,
jeyamodu paeyai ethirththuk konntaeka,
jepathapa thiyaananj seyvatharkaaka. – pari

2. narkarunnaithanai nalamudan vaanga,
naaloru maeniyaay aaviyi longa,
sarkunaraay ivar sapaiyaik kai thaanga,
sakala theethaana paethangalum neenga. – pari

3. anjnjaananga lotivar samarpuriya,
arunnmarai yathinaalang kalaiyariya,
nenjinil anpu kolunthuvit deriya,
ninnatiyaariva renpathu theriya. – pari

4. pakthiyun thaalmaiyumaa yivar uyya,
parisuththamaana jeeviyanj seyya,
niththamung kirupaiyin kani koyya,
nilaivaramaay ivaraaviyil thuyya. – pari

5. thinamarai yothi jepiththu mantada,
thiruchchapai yathinaik kiyaththinir kooda,
unarvodu tholuthu geethangal paada,
ullan thirunthu jeevaarukaloda. – pari

PowerPoint Presentation Slides for the song Parisuthaavi Neer Vaarum – பரிசுத்தாவி நீர் வாரும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரிசுத்தாவி நீர் வாரும் PPT
Parisuthaavi Neer Vaarum PPT

பரி திருச்சபை பல்லவி பரிசுத்தாவி நீர் வாரும்திடப் படுத்தல் பெறுவோர்க் கருள் தாரும்இன்று அனுபல்லவி அருளினைப் பெருக்கும் அக்கினி மயமே ஆவியின் நற்கனி நல்குமா தூயமே English