Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பணிந்து நடந்து கொண்டாரே

பணிந்து நடந்து கொண்டாரே பரன் பாலனும்
கனிந்து தாய் தந்தையருக்கு
அணிந்து தேவ தயவைப் பணிந்த மனதினோடு
அவர்க்கு தணிந்து எதிர்முனைந்து சொல்லாதபடி – பணி

1.தந்தை தாய் தனை மதித்து அவருடைய‌
தயவின் சித்தத்துக் கமைந்த‌
மைந்தர்கள் உலகினில் வாழ்ந்து இருப்பாரென்று
சிந்தை மகிழ்ந்து பரன் செப்பிய மொழிப்படி – பணி

2.தந்தைக் குகந்த வேளையில் அவருடனே
விந்தை யுடனே பயின்றார்;
நிந்தை யிதுவென்றெண்ணிச் சிந்தைக் கலங்கிடாமல்
எந்த விதமும் நரர் தன்னைப் பின்பற்றியேகப் – பணி

3.பாவம் ஒனறு தவிர நம்மைப் போலப்
பாடுள்ளவராய் நின்றாரே
நாவின் வாக்கினிலே இருந்தாரே புனிதமாய்
பாவீ அவரைக் கண்டு பயிலுவது நன்று – பணி

4.ஆவி பலமடைந்தார்; உலக தேவ‌
அறிவிலும் நிறைவு கொண்டார்;
தேவ கிருபையிலும் திருமறை முறையிலும்
பூவில் அவர்க்கு நிகர் புனித ரில்லாதபடி – பணி

Paninthu Nadanthu Kondarae – பணிந்து நடந்து கொண்டாரே Lyrics in English

Panninthu nadanthu konndaarae paran paalanum kaninthu thaay thanthaiyarukku anninthu thaeva thayavaip pannintha manathinodu avarkku thanninthu ethirmunainthu sollaathapati – panni 1.thanthai thaay thanai mathiththu avarutaiya‌ thayavin siththaththuk kamaintha‌ maintharkal ulakinil vaalnthu iruppaarentu sinthai makilnthu paran seppiya molippati – panni 2.thanthaik kukantha vaelaiyil avarudanae vinthai yudanae payintar; ninthai yithuventennnnich sinthaik kalangidaamal entha vithamum narar thannaip pinpattiyaekap – panni 3.paavam onaraு thavira nammaip polap paadullavaraay nintarae naavin vaakkinilae irunthaarae punithamaay paavee avaraik kanndu payiluvathu nantu – panni 4.aavi palamatainthaar; ulaka thaeva‌ arivilum niraivu konndaar; thaeva kirupaiyilum thirumarai muraiyilum poovil avarkku nikar punitha rillaathapati – panni

PowerPoint Presentation Slides for the song Paninthu Nadanthu Kondarae – பணிந்து நடந்து கொண்டாரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பணிந்து நடந்து கொண்டாரே PPT
Paninthu Nadanthu Kondarae PPT

பணி பரன் தாய் தேவ அவர்க்கு பணிந்து நடந்து கொண்டாரே பாலனும் கனிந்து தந்தையருக்கு அணிந்து தயவைப் பணிந்த மனதினோடு தணிந்து எதிர்முனைந்து சொல்லாதபடி தந்தை English