Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாதகன் என் வினைதீர்

பல்லவி

பாதகன் என் வினைதீர், ஐயா; கிருபாகரா, நின்
பாடு நினைந் தெனைச் சேர், ஐயா.

அனுபல்லவி

தீதகற்றவே சிறந்த
சேண் உலகினிமை விட்டு,
பூதலத் துகந்து வந்த
புண்ணியனே, யேசு தேவா. – பாதகன்

சரணங்கள்

1. வந்துறும் எப்பாவிகளையும் – அங்கீகரிக்கும்
மாசில்லாத யேசு நாதனே,
உந்தன் இடம் வந்துளமே உருகி அழுதமாது
முந்திமிகச் செய்த பாவம் முழுதும் பொறுத்தாய் அன்றோ? – பாதகன்

2. சிந்தின உன் உதிரம் அதே – தீயோன் மறத்தைச்
சின்னபின்னம் செய்ய வல்லதே;
பந்தம் உற உன்றன் வலப் பாகாமுற்ற கள்வனையே
விந்தையுற வேரட்சித்த வேதனே, அவ்விதமாயே – பாதகன்

3. அற்பவிசுவாசமுளன் ஆம் – அடியேனை இனி
ஆதரிப்பதார்? உன் தஞ்சமே;
தற்பரா, உனைத் தரிசித் தன்றி நம்பிடேன், எனவே
செப்பின தோமாவுக்குப்போல், திரு உருக்காட்சி தந்து. – பாதகன்

Paathakan En Vinaitheer – பாதகன் என் வினைதீர் Lyrics in English

Pallavi paathakan en vinaitheer, aiyaa; kirupaakaraa, nin paadu ninain thenaich ser, aiyaa. Anupallavi theethakattavae sirantha senn ulakinimai vittu, poothalath thukanthu vantha punnnniyanae, yaesu thaevaa. – paathakan saranangal 1. Vanthuraுm eppaavikalaiyum – angaீkarikkum maasillaatha yaesu naathanae, unthan idam vanthulamae uruki aluthamaathu munthimikach seytha paavam muluthum poraுththaay anto? – paathakan 2. Sinthina un uthiram athae – theeyon maraththaich sinnapinnam seyya vallathae; pantham ura untan valap paakaamutta kalvanaiyae vinthaiyura vaeratchiththa vaethanae, avvithamaayae – paathakan 3. Arpavisuvaasamulan aam – atiyaenai ini aatharippathaar? Un thanjamae; tharparaa, unaith tharisith thanti nampitaen, enavae seppina thomaavukkuppol, thiru urukkaatchi thanthu. – paathakan

PowerPoint Presentation Slides for the song Paathakan En Vinaitheer – பாதகன் என் வினைதீர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாதகன் என் வினைதீர் PPT
Paathakan En Vinaitheer PPT

பாதகன் ஐயா யேசு பல்லவி வினைதீர் கிருபாகரா நின் பாடு நினைந் தெனைச் சேர் அனுபல்லவி தீதகற்றவே சிறந்த சேண் உலகினிமை பூதலத் துகந்து புண்ணியனே English