Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஒரு மருந்தரும் குருமருந்து

ஒரு மருந்தரும் குருமருந்-(து)
உம்பரத்தில் நான் கண்டேனே.

அனுபல்லவி

அருள் மருந்துடன் ஆனந்த மருந்து,
ஆதியிற்றனாய் முளைத்த மருந்து,
வரும் வினைகளை மாற்றும் மருந்து,
வறுமையுள்ளோர்க்கே வாய்த்த மருந்து. — ஒரு

சரணங்கள்

1. சிங்கார வனத்தில் செழித்த மருந்து,
ஜீவதரு மீதில் படர்ந்த மருந்து,
அங்குவிளை பவம் மாற்றும் மருந்து,
வல்ல சர்ப்ப விஷம் மாய்த்த மருந்து — ஒரு

2. மோசே முதல் முன்னோர் காணா மருந்து,
மோட்ச மகிமையைக் காட்டும் மருந்து,
தேசத்தோர் பிணியைத் தீர்த்த மருந்து,
தீர்க்கதரிசிகள் செப்பிய மருந்து — ஒரு

3. தீராத குஷ்டத்தைத் தீர்த்த மருந்து,
செவிடு குருடூமை தின்ற மருந்து,
மானா திருத்துவ மான மருந்து,
மனுவாய் உலகினில் வந்த மருந்து. — ஒரு

4. செத்தோரை உயிரோ டெழுப்பும் மருந்து,
ஜீவன் தவறா தருளும் மருந்து,
பத்தரைச் சுத்திகரித்திடும் மருந்து,
பரம வாழ்வினில் சேர்க்கும் மருந்து. — ஒரு

Oru Maruntharum Kurumarunthu Lyrics in English

Oru maruntharum kurumarun-(thu) umparaththil naan kanntaenae. Anupallavi arul marunthudan aanantha marunthu, aathiyittanaay mulaiththa marunthu, varum vinaikalai maattaுm marunthu, varaுmaiyullorkkae vaayththa marunthu. — oru saranangal 1. Singaara vanaththil seliththa marunthu, jeevatharu meethil padarntha marunthu, anguvilai pavam maattaுm marunthu, valla sarppa visham maayththa marunthu — oru 2. Moses muthal munnor kaannaa marunthu, motcha makimaiyaik kaattum marunthu, thaesaththor pinniyaith theerththa marunthu, theerkkatharisikal seppiya marunthu — oru 3. Theeraatha kushdaththaith theerththa marunthu, sevidu kurutoomai thinta marunthu, maanaa thiruththuva maana marunthu, manuvaay ulakinil vantha marunthu. — oru 4. Seththorai uyiro deluppum marunthu, jeevan thavaraa tharulum marunthu, paththaraich suththikariththidum marunthu, parama vaalvinil serkkum marunthu. — oru

PowerPoint Presentation Slides for the song Oru Maruntharum Kurumarunthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஒரு மருந்தரும் குருமருந்து PPT
Oru Maruntharum Kurumarunthu PPT

மருந்து மாற்றும் தீர்த்த மருந்தரும் குருமருந்து உம்பரத்தில் கண்டேனே அனுபல்லவி அருள் மருந்துடன் ஆனந்த ஆதியிற்றனாய் முளைத்த வினைகளை வறுமையுள்ளோர்க்கே வாய்த்த சரணங்கள் சிங்கார வனத்தில் English