Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நம்ப வேண்டாம்

1. நம்ப வேண்டாம், நம்ப வேண்டாம்
பொய்யுலகை நம்ப வேண்டாம்;
நேசங் காட்டித் துரோகஞ் செய்யும்
பாழுலகை நம்ப வேண்டாம்

2. உன்னை பெற்ற மாதாவெங்கே?
போஷித்த உன் தந்தையெங்கே?
போய்விட்டாரோ போய்விட்டாரோ
உன்னை விட்டுப் போய்விட்டாரோ?

3. திருடனைப் போல சாவு வரும்
திடுக்கிடுவாய் நீயும் அப்போ;
பாம்பின் வாயில் தவளை போலே
பரிதபிப்பாய்! பரிதபிப்பாய்!

4. பிரேதமாகப் பாவி யுன்னை
தூக்கிப் போடுவார் கல்லறைக்கு;
அங்கே உன்னை வைத்திடுவார்
நம்புவாயோ உலகைப் பின்னும்?

5. இயேசு நாதர் பாதந்தேடும்;
மீட்பை இன்றே பெற்றுக்கொள்ளும்
குருசில் தொங்கும் நேசர் பாரும்
குணமாக்குவார் இப்போ வாரும்

Namba Vendam – நம்ப வேண்டாம் Lyrics in English

1. nampa vaenndaam, nampa vaenndaam
poyyulakai nampa vaenndaam;
naesang kaattith thurokanj seyyum
paalulakai nampa vaenndaam

2. unnai petta maathaavengae?
poshiththa un thanthaiyengae?
poyvittaro poyvittaro
unnai vittup poyvittaro?

3. thirudanaip pola saavu varum
thidukkiduvaay neeyum appo;
paampin vaayil thavalai polae
parithapippaay! parithapippaay!

4. piraethamaakap paavi yunnai
thookkip poduvaar kallaraikku;
angae unnai vaiththiduvaar
nampuvaayo ulakaip pinnum?

5. Yesu naathar paathanthaedum;
meetpai inte pettukkollum
kurusil thongum naesar paarum
kunamaakkuvaar ippo vaarum

PowerPoint Presentation Slides for the song Namba Vendam – நம்ப வேண்டாம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நம்ப வேண்டாம் PPT
Namba Vendam PPT

நம்ப வேண்டாம் உன்னை போய்விட்டாரோ பரிதபிப்பாய் பொய்யுலகை நேசங் காட்டித் துரோகஞ் செய்யும் பாழுலகை பெற்ற மாதாவெங்கே போஷித்த தந்தையெங்கே விட்டுப் திருடனைப் சாவு திடுக்கிடுவாய் English