Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மன்னுயிர்த் தொகுதி

1.மன்னுயிர்த் தொகுதியீடேற வானினும்
இந்நிலத் தினும்பிறி திலையென் றேமறை
பன்னியேத் தெடுப்பது பாவ ஜீவருக்கு
இன்னமு தாயதி யேசு நாமமே.

2.தெருளெலாந் தனதெனுந் தெய்வ மாமறைப்
பொருளெலாந் தனதெனப் பொலிந்தி லங்குவது
அருளெலாம் அன்பெலாம் அறனெலாம் வளர்த்து
இருளெலாந் தொலைப்பதி யெசு நாமமே.

3.நித்திய ஜீவனும் நெறியும் போதமும்
சத்திய நிலையமும் தானென்றுள்ளது
பத்தியில் பரவுவோர் பரம வீடுற
இத்தலத் திறத்ததி யேசு நாமமே.

4.நன்னெறி புகுத்திடும் நவையி னீக்கிடும்
இன்னிலை யகற்றிடும் இகல் செகுத்திடும்
உன்னதத் துய்த்திடும் ஒருங்கு காத்திடும்
எந்நலத்தையுந் தரும் யேசு நாமமே.

5.அன்பினுக் குருவநல் லறத்துக் காலயம்
மன்பதைக் கருண்மழை வழங்கு பைம்புயல்
நின்பர மென்றினை வோர்க்கு நித்தியபேர்
இன்பசஞ் சீவிதம் யேசு நாமமே.

6.தருமமும் ஒழுக்கமும் தவமும் ஞானமும்
கருமமும் ஈதலால் கருதில் யாதுமோர்
அருமையும் பயனுமொன்றில்லை யாதலால்
இருமையுந் துணையெனக் கியேசு நாமமே.

Mannuyir Thoguthi – மன்னுயிர்த் தொகுதி Lyrics in English

1.mannuyirth thokuthiyeetaera vaaninum innilath thinumpiri thilaiyen raேmarai panniyaeth theduppathu paava jeevarukku innamu thaayathi yaesu naamamae. 2.therulelaan thanathenun theyva maamaraip porulelaan thanathenap polinthi languvathu arulelaam anpelaam aranelaam valarththu irulelaan tholaippathi yesu naamamae. 3.niththiya jeevanum neriyum pothamum saththiya nilaiyamum thaanentullathu paththiyil paravuvor parama veedura iththalath thiraththathi yaesu naamamae. 4.nanneri pukuththidum navaiyi neekkidum innilai yakattidum ikal sekuththidum unnathath thuyththidum orungu kaaththidum ennalaththaiyun tharum yaesu naamamae. 5.anpinuk kuruvanal laraththuk kaalayam manpathaik karunnmalai valangu paimpuyal ninpara mentinai vorkku niththiyapaer inpasanj seevitham yaesu naamamae. 6.tharumamum olukkamum thavamum njaanamum karumamum eethalaal karuthil yaathumor arumaiyum payanumontillai yaathalaal irumaiyun thunnaiyenak kiyaesu naamamae.

PowerPoint Presentation Slides for the song Mannuyir Thoguthi – மன்னுயிர்த் தொகுதி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மன்னுயிர்த் தொகுதி PPT
Mannuyir Thoguthi PPT

நாமமே யேசு மன்னுயிர்த் தொகுதியீடேற வானினும் இந்நிலத் தினும்பிறி திலையென் றேமறை பன்னியேத் தெடுப்பது பாவ ஜீவருக்கு இன்னமு தாயதி தெருளெலாந் தனதெனுந் தெய்வ மாமறைப் English