பல்லவி
மலையாதே, நெஞ்சமே,-இப்படி நம்மை
வகுத்தவனே தஞ்சமே.
அனுபல்லவி
அலையாதருள் மந்த்ர கலையாகம சுந்த்ர
அருத்தப் பண் கருத்தர்க்கென்
றுரித்தல் கொண் டிருத்திக்கொள். – மலை
சரணங்கள்
1. கருத்தர் கட்டுவதல்லோ வீடு,-நரர்
கட்டும் கிரியைகள் வீண் பாடு,
வருத்தப்படுவதென்ன கேடு?-பேயின்
மயக்கமெல்லாம் விட்டுப்போடு;
தரித்திரத் திரள் இக்கட்டு பெருத்த கவலைப்பட்டுச்
சலியாதிரு, நலியாதிரு
தந்தையார் சுதன் வந்த நாள் இது. – மலை
2. எண்ணத்தினால் என்னகூடும்?-தெய்வம்
இட்டதல்லோ வந்து நீடும்;
மண்ணைச் சதம் என்றெண்ணி, வாடும்-மக்கள்
மனதில் துயரம் வந்து மூடும்;
கண்ணைத் திறந்து நோக்கு, விண்ணைச் சிறந்துள்ளார்க்குக்
குருத்தாய் இரு; உரித்தாய் இரு;
குருத்தரானவர் ஒருத்தரே துணை. – மலை
3. என்ன கவலைப்பட்டும் நஷ்டமே,-கிறிஸ்
தேசு பிறந்ததுன் அதிஷ்டமே;
உன்னதன் பண்ணின திட்டமே,-உனக்
கொழுங்கு ப்ரமாணத்தின் சட்டமே;
பின்னப்பட் டுலையாதே, சின்னப்பட் டலையாதே;
பெருத்த நாள் இது, கருத்தர்நாள் இது,
பெலப்பாய் இரு, கெலிப்பாய் இரு. – மலை
Malaiyaathe Nenjamae – மலையாதே நெஞ்சமே Lyrics in English
Pallavi
Malaiyaathae, nenjamae,-ippati nammai
Vakuththavanae thanjamae.
Anupallavi
Alaiyaatharul manthra kalaiyaakama sunthra
Aruththap pann karuththarkken
Raுriththal konn tiruththikkol. – malai
Saranangal
1. Karuththar kattuvathallo veedu,-narar
Kattum kiriyaikal veenn paadu,
Varuththappaduvathenna kaedu?-paeyin
Mayakkamellaam vittuppodu;
Thariththirath thiral ikkattu peruththa kavalaippattuch
Saliyaathiru, naliyaathiru
Thanthaiyaar suthan vantha naal ithu. – malai
2. Ennnaththinaal ennakoodum?-theyvam
Ittathallo vanthu needum;
Mannnnaich satham entennnni, vaadum-makkal
Manathil thuyaram vanthu moodum;
Kannnnaith thiranthu Nnokku, vinnnnaich siranthullaarkkuk
Kuruththaay iru; uriththaay iru;
Kuruththaraanavar oruththarae thunnai. – malai
3. Enna kavalaippattum nashdamae,-kiris
Thaesu piranthathun athishdamae;
Unnathan pannnnina thittamae,-unak
Kolungu pramaanaththin sattamae;
Pinnappat dulaiyaathae, sinnappat dalaiyaathae;
Peruththa naal ithu, karuththarnaal ithu,
Pelappaay iru, kelippaay iru. – malai
PowerPoint Presentation Slides for the song Malaiyaathe Nenjamae – மலையாதே நெஞ்சமே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download மலையாதே நெஞ்சமே PPT
Malaiyaathe Nenjamae PPT

