Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாறிடா எம் மா நேசரே

MAARIDA EM MAA NESARE – மாறிடா எம் மா நேசரே SONG LYRICS

1. மாறிடா எம் மா நேசரே – ஆ
மாறாதவர் அன்பெந்நாளுமே
கல்வாரி சிலுவை மீதிலே
காணுதே இம்மா அன்பிதே – ஆ

ஆ! இயேசுவின் மகா அன்பிதே
அதன் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணையேதும் வேறில்லையே
இணை ஏதும் வேறில்லையே

2. பாவியாக இருக்கையிலே – அன்பால்
பாரில் உன்னைத் தேடி வந்தாரே
நீசன் என்றுன்னைத் தள்ளாமலே
நேசனாக மாற்றிடவே. — ஆ! இயேசு

3. உள்ளத்தால் அவரைத் தள்ளினும் – தம்
உள்ளம் போல் நேசித்ததினால்
அல்லல் யாவும் அகற்றிடவே
ஆதி தேவன் பலியானாரே — ஆ! இயேசு

4. ஆவியால் அன்பைப் பகிர்ந்திட – தூய
தேவனின் விண் சாயல் அணிய
ஆவியாலே அன்பைச் சொரிந்தார்
ஆவலாய் அவரைச் சந்திக்க — ஆ! இயேசு

5. நியாய விதி தினமதிலே – நீயும்
நிலையாகும் தைரியம் பெறவே
பூரணமாய் அன்பு பெருக
புண்ணியரின் அன்பு வல்லதே — ஆ! இயேசு

6. பயமதை நீக்கிடுமே – யாவும்
பாரினிலே சகித்திடுமே
அது விசுவாசம் நாடிடுமே
அன்பு ஒருக்காலும் ஒழியாதே — ஆ! இயேசு

Maarida Em Maa Nesare – மாறிடா எம் மா நேசரே Lyrics in English

MAARIDA EM MAA NESARE – maaridaa em maa naesarae SONG LYRICS 1. Maaridaa em maa naesarae – aa maaraathavar anpennaalumae kalvaari siluvai meethilae kaanuthae immaa anpithae – aa aa! Yesuvin makaa anpithae athan aalam ariyalaakumo itharkinnaiyaethum vaerillaiyae innai aethum vaerillaiyae 2. Paaviyaaka irukkaiyilae – anpaal paaril unnaith thaeti vanthaarae neesan entunnaith thallaamalae naesanaaka maattidavae. — aa! Yesu 3. Ullaththaal avaraith thallinum – tham ullam pol naesiththathinaal allal yaavum akattidavae aathi Dhevan paliyaanaarae — aa! Yesu 4. Aaviyaal anpaip pakirnthida – thooya thaevanin vinn saayal anniya aaviyaalae anpaich sorinthaar aavalaay avaraich santhikka — aa! Yesu 5. Niyaaya vithi thinamathilae – neeyum nilaiyaakum thairiyam peravae pooranamaay anpu peruka punnnniyarin anpu vallathae — aa! Yesu 6. Payamathai neekkidumae – yaavum paarinilae sakiththidumae athu visuvaasam naadidumae anpu orukkaalum oliyaathae — aa! Yesu

PowerPoint Presentation Slides for the song Maarida Em Maa Nesare – மாறிடா எம் மா நேசரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மாறிடா எம் மா நேசரே PPT
Maarida Em Maa Nesare PPT

இயேசு அன்பு மாறிடா எம் மா நேசரே அன்பிதே வேறில்லையே யாவும் MAARIDA EM MAA NESARE SONG LYRICS மாறாதவர் அன்பெந்நாளுமே English