இயேசு மேலானவர்
மானிடரே! போற்றுங்களே!
மாநிலத்தில் பறைசாற்றுங்களே!
மேலானவர் இயேசு மேலானவர்
ஆகாயம் பூமிக்கும் மேலானவர் – 2
1. இருளில் ஒளியும் இயேசு – நம்
இதய விளக்கும் இயேசு
மருள்வோர் வழியும் இயேசு – அவர்
மனதின் உறுதி இயேசு
அருளின் சுனையும் இயேசு – உயர்
அன்பின் பொருளும் இயேசு
2. உலகம் அவரால் வாழும் – அதில்
உயிர்கள் புனிதம் ஆகும்
பலரின் வாழ்வு மாறும் – பாவப்
பழிகள் யாவும் தீரும்
நிலவும் மகிழ்ச்சி நாளும் – இனி
நிறையக் குடும்பம் தோறும்
3. அலைகள் வாழ்வில் மோதும் – பலர்
அழிவைக் காண நேரும்
மலைகள் பெயர்ந்து போகும் – பலர்
மனங்கள் பயந்து சாகும்
நிலையாய்க் கரங்கள் கோர்ப்பார் – நம்மை
நிஜமாய்க் கரையில் சேர்ப்பார்
Maanitarae! Poerrunkalae! Lyrics in English
Yesu maelaanavar maanidarae! Pottaுngalae! Maanilaththil paraisaattaுngalae! maelaanavar Yesu maelaanavar aakaayam poomikkum maelaanavar – 2 1. Irulil oliyum Yesu – nam ithaya vilakkum Yesu marulvor valiyum Yesu – avar manathin uraுthi Yesu arulin sunaiyum Yesu – uyar anpin porulum Yesu 2. Ulakam avaraal vaalum – athil uyirkal punitham aakum palarin vaalvu maaraுm – paavap palikal yaavum theerum nilavum makilchchi naalum – ini niraiyak kudumpam thoraுm 3. Alaikal vaalvil mothum – palar alivaik kaana naerum malaikal peyarnthu pokum – palar manangal payanthu saakum nilaiyaayk karangal korppaar – nammai nijamaayk karaiyil serppaar
PowerPoint Presentation Slides for the song Maanitarae! Poerrunkalae!
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு மேலானவர் PPT
Maanitarae! Poerrunkalae! PPT

