கர்த்தரின் பந்தியில் வா
கர்த்தரின் பந்தியில் வா. – சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா.
கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின
காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி – கர்த்தரின்
1. ஜீவ அப்பம் அல்லோ? – கிறிஸ்துவின் திருச் சரீரம் அல்லோ?
பாவ மனங் கல்லோ? – உனக்காய்ப் பகிரப்பட்ட தல்லோ?
தேவ குமாரனின் ஜீவ அப்பத்தை நீ
தின்று அவருடன் என்றும் பிழைத்திட – கர்த்தரின்
2. தேவ அன்பைப் பாரு – கிறிஸ்துவின் சீஷர் குறை தீரு.
பாவக் கேட்டைக் கூறு – ராப்போசன பந்திதனில் சேரு.
சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்
தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே – கர்த்தரின்
3. அன்பின் விருந்தாமே – கர்த்தருடன் ஐக்யப் பந்தி யாமே
துன்பம் துயர் போமே .. இருதயம் சுத்த திடனாமே.
இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு
ஏது தாமதமும் இல்லாதிப்போதே வா – கர்த்தரின்
Kartharin Panthiyil Vaa Lyrics in English
Karththarin panthiyil vaa karththarin panthiyil vaa. – sakotharaa karththarin panthiyil vaa. Karththar anpaaych sontha raththaththaich sinthina kaaranaththai manap pooranamaay ennnni – karththarin 1. Jeeva appam allo? – Kristhuvin thiruch sareeram allo? Paava manang kallo? – unakkaayp pakirappatta thallo? Thaeva kumaaranin jeeva appaththai nee thintu avarudan entum pilaiththida – karththarin 2. Thaeva anpaip paaru – Kristhuvin seeshar kurai theeru. Paavak kaettaைk kooraு – raapposana panthithanil seru. Saavukkuriya maa paavamulla lokam thannil manam vaiththu anniyan aakaathae – karththarin 3. Anpin virunthaamae – karththarudan aikyap panthi yaamae thunpam thuyar pomae .. Iruthayam suththa thidanaamae. Inpam mikum thaeva anpin virunthukku aethu thaamathamum illaathippothae vaa – karththarin
PowerPoint Presentation Slides for the song Kartharin Panthiyil Vaa
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தரின் பந்தியில் வா PPT
Kartharin Panthiyil Vaa PPT

