பல்லவி
காணிக்கை தருவாயே-கர்த்தருக்குனது
காணிக்கை தருவாயே
அனுபல்லவி
காணிக்கை தா உனக்காய் ஆணிக் குரிசி லேசு
வேணும் ரட்சிப்பினை நீ காணும்படி செய்ததால். – காணிக்கை
சரணங்கள்
1. பத்தில் ஒரு பங்குதானோ?-பத்தினில் கட்டுப்
பட்ட யூதருக் கல்லவோ?
அத்தன் உனக்களித்த அளவை உட்கார்ந்து பார்த்தால்,
பத்தில் ஒரு பங்கல்ல, பல மடங்காகிடாதோ? – காணிக்கை
2. உன்றன் உடல் உன் சொந்தமோ?-அதைவிடினும்
உன் மனம் ஆவி பந்தமோ?
அன்னவன் உடைய தென்றறிந்து உணர்வாயானால்
உன்னையும் உன்னுடைய உடைமையுமல்லோ ஈவாய்?- காணிக்கை
3. தேவ வசனம் பரப்ப,-அதனுக்கென்று
செல்லும் செலவை நிரப்ப,
ஆவலாய் யேசுவுக்கே ஆராதனை நடத்தும்
தேவ ஊழியத்துக்கும் திறந்த மனதுடனே – காணிக்கை
4. பயிர் பலன் மூலமாகவும்,-இன்றும் பலர்க்குப்
பணம் முதலானதாகவும்,
உயிர்ப் பிராணியாகவும் உதவும் கடவுளுக்கே
உயிரைப் படைப்பாயோ, உடைமையைக் கொடாவிடில்? – காணிக்கை
Kaanikai Tharuvayae – காணிக்கை தருவாயே Lyrics in English
Pallavi
Kaannikkai tharuvaayae-karththarukkunathu
Kaannikkai tharuvaayae
Anupallavi
Kaannikkai thaa unakkaay aannik kurisi laesu
Vaenum ratchippinai nee kaanumpati seythathaal. – kaannikkai
Saranangal
1. Paththil oru panguthaano?-paththinil kattup
Patta yootharuk kallavo?
Aththan unakkaliththa alavai utkaarnthu paarththaal,
Paththil oru pangalla, pala madangaakidaatho? – kaannikkai
2. Untan udal un sonthamo?-athaivitinum
Un manam aavi panthamo?
Annavan utaiya thentarinthu unarvaayaanaal
Unnaiyum unnutaiya utaimaiyumallo eevaay?- kaannikkai
3. Thaeva vasanam parappa,-athanukkentu
Sellum selavai nirappa,
Aavalaay yaesuvukkae aaraathanai nadaththum
Thaeva ooliyaththukkum thirantha manathudanae – kaannikkai
4. Payir palan moolamaakavum,-intum palarkkup
Panam muthalaanathaakavum,
Uyirp piraanniyaakavum uthavum kadavulukkae
Uyiraip pataippaayo, utaimaiyaik kodaavitil? – kaannikkai
PowerPoint Presentation Slides for the song Kaanikai Tharuvayae – காணிக்கை தருவாயே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download காணிக்கை தருவாயே PPT
Kaanikai Tharuvayae PPT

