Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இவரே பெருமான் மற்றப்

இவரே பெருமான் , மற்றப்
பேர் அலவே பூமான் – இவரே பெருமான்

1. கவலைக் கிடங்கொடுத் தறியார் – வேறு
பவவினை யாதுமே தெரியார் – இப்

புவனமீது நமக்குரியார் — இவரே

2. குருடர்களுக் குதவும் விழியாம் – பவக்
கரும இருளை நீக்கும் ஒளியாம் – தெய்வம்

இருக்குந் தலஞ்சல் வாசல் வழியாம் — இவரே

3. பலபிணி தீர்க்கும் பரிகாரி – சொல்லும்
வலமையில் மிக்க விபகாரி – எக்
குலத்துக்கும் நல்ல உபகாரி — இவரே

4. அறஞ் செய்வதினில் ஒரு சித்தன் – கொடு
மறம்விடு பவர்க்கருள் முத்தன் – இங்கே
இறந்தோர்க் குயிரீயும் கர்த்தன் — இவரே

5. அலகை தனை ஜெயித்த வீரன் – பவ
உலகை ரட்சித்த எழிற்பேரன் – விண்
ணுலகு வாழ் தேவ குமாரன் — இவரே

6. பொன்னுலகத் தனில்வாழ் யோகன் – அருள்
துன்ன உலகில் நன்மைத் தேகன் – நம்பால்

தன்னை யளித்த ஓர் தியாகன் — இவரே

Ivarae Perumaan Lyrics in English

Ivarae perumaan , mattap paer alavae poomaan – ivarae perumaan 1. Kavalaik kidangaொduth thariyaar – vaeraு pavavinai yaathumae theriyaar – ip puvanameethu namakkuriyaar — ivarae 2. Kurudarkaluk kuthavum viliyaam – pavak karuma irulai neekkum oliyaam – theyvam irukkun thalanjal vaasal valiyaam — ivarae 3. Palapinni theerkkum parikaari – sollum valamaiyil mikka vipakaari – ek kulaththukkum nalla upakaari — ivarae 4. Aranj seyvathinil oru siththan – kodu maramvidu pavarkkarul muththan – ingae iranthork kuyireeyum karththan — ivarae 5. Alakai thanai jeyiththa veeran – pava ulakai ratchiththa elirpaeran – vinn nulaku vaal thaeva kumaaran — ivarae 6. Ponnulakath thanilvaal yokan – arul thunna ulakil nanmaith thaekan – nampaal thannai yaliththa or thiyaakan — ivarae

PowerPoint Presentation Slides for the song Ivarae Perumaan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இவரே பெருமான் மற்றப் PPT
Ivarae Perumaan PPT

இவரே பெருமான் மற்றப் அலவே பூமான் கவலைக் கிடங்கொடுத் தறியார் பவவினை யாதுமே தெரியார் இப் புவனமீது நமக்குரியார் குருடர்களுக் குதவும் விழியாம் பவக் English