Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இதோ அடியேனிருக்கிறேன்

பல்லவி

இதோ! அடியேனிருக்கிறேன்,-என்னை
அனுப்பும்,
ஏசுவே, இப்போதே போகிறேன்.

அனுபல்லவி

இதோ! போகிறேன் நாதனே, இப்புவியில் நீர் எனக்கே
எந்த இடம் காண்பித்தாலும் உந்தன் சித்தம் செய்திடுவேன்;-

சரணங்கள்

1. மலைகள், பள்ளங்கள் தாண்டியோ,-மா கஷ்டமான
வனங்கள், கடல்கள் கடந்தோ,
தொலை தூரமாகச் சென்றோ, சுவிசேஷம் கூறும்படிச்
சொல்லும்போது நீர் ஏசுவே, துரிதமாய்ச் சென்றிடுவேன்; – இதோ

2. வறியர் அறிவீனருக்கும்,-மா துஷ்டருக்கும்,
வணங்காக் கழுத்துள்ளோருக்கும்,
அறிவி என் நாமம் என்று அடியேனை ஏவும்போது
சரியென்றிணங்கி எல்லா சனத்தையும் தேடிப் போவேன்; – இதோ

3. வயல் நிலங்கள் இப்பொழுதே-அறுப்புக்கேற்க
வளமாய் விளைந்திருக்குதே;
நயமான வேலையாட்கள் ஞாலமதில் தேடுகின்றீர்;
பயமின்றி என்னை உந்தன் பாதமதில் ஒப்புவித்தேன். – இதோ

4. உலக முடிவு மட்டுமே-சகல நாளும்
உங்களோடிருப்பேன் என்றீரே;
மலைமேலே நீர் கொடுத்த மாபெரிய கட்டளையைத்
தலைமேலே கொண்டிப்போது தரணியில் ஏகிடுவேன். – இதோ

இதோ அடியேனிருக்கிறேன் – Itho Adiyean Irukirean Lyrics in English

Pallavi itho! Atiyaenirukkiraேn,-ennai anuppum, aesuvae, ippothae pokiraேn. Anupallavi itho! Pokiraேn naathanae, ippuviyil neer enakkae entha idam kaannpiththaalum unthan siththam seythiduvaen;- saranangal 1. Malaikal, pallangal thaanntiyo,-maa kashdamaana vanangal, kadalkal kadantho, tholai thooramaakach sento, Suvisesham kooraுmpatich sollumpothu neer aesuvae, thurithamaaych sentiduvaen; – itho 2. Variyar ariveenarukkum,-maa thushdarukkum, vanangaak kaluththullorukkum, arivi en naamam entu atiyaenai aevumpothu sariyentinangi ellaa sanaththaiyum thaetip povaen; – itho 3. Vayal nilangal ippoluthae-araுppukkaerka valamaay vilainthirukkuthae; nayamaana vaelaiyaatkal njaalamathil thaedukinteer; payaminti ennai unthan paathamathil oppuviththaen. – itho 4. Ulaka mutivu mattumae-sakala naalum ungalotiruppaen enteerae; malaimaelae neer koduththa maaperiya kattalaiyaith thalaimaelae konntippothu tharanniyil aekiduvaen. – itho

PowerPoint Presentation Slides for the song இதோ அடியேனிருக்கிறேன் – Itho Adiyean Irukirean

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இதோ அடியேனிருக்கிறேன் PPT
Itho Adiyean Irukirean PPT

இதோ நீர் ஏசுவே போகிறேன் உந்தன் பல்லவி அடியேனிருக்கிறேன்என்னை அனுப்பும் இப்போதே அனுபல்லவி நாதனே இப்புவியில் எனக்கே காண்பித்தாலும் சித்தம் செய்திடுவேன் சரணங்கள் மலைகள் பள்ளங்கள் English