குணப்படு பாவி, தேவ
கோபம் வரும் மேவி – இப்போ
கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம்
காலமிருக்கையில் சீலமதாக நீ
வேதத்தில் உன் தனை பார் – அந்த
வேத விதிப்படி நேர்
நீதியை செய்தவனார்?- தூய
நின்மலன் வாக்க தோ கூர்;
தீதுறும் பாவியின் தீமையறிந்துகொள்;
நாதன் கிறிஸ்து இப்போதே உரைக்கிறார்.
கர்த்தனை நீ மறந்தாய் – அவர்
கற்பனையைத் துறந்தாய்,
பக்தியின்மை தெரிந்தாய் – பொல்லாப்
பாவ வழி திரிந்தாய்,
புத்திகெட்ட ஆட்டுக் குட்டியே ஓடி வா,
உத்தம மேய்ப்பனார் கத்தி யழைக்கிறார்
துக்கமடையாயோ? பாவி
துயரமாகாயோ?
மிக்கப் புலம்பாயோ? – மனம்
மெலிந்துருகாயோ?
இக்கணம் பாவக் கசப்பை யுணராயோ?
தக்க அருமறைப் பக்கந் தொடராயோ?
தாவீ தரசனைப்போல் – தன்னைத்
தாழ்த்தும் மனாசேயைப்போல்
பாவி மனுஷியைப்போல் – மனம்
பதைத்த பேதுருபோல்,
தேவனுக்கேற்காத தீமைசெய்தேனென்று
கூவிப் புலம்பு நல் ஆவியின் சொற்படி
உன்னை நீ நம்பாதே! – இவ்
வுலகையும் நம்பாதே;
பொன்னை நீ நம்பாதே – எப்
பொருளையும் நம்பாதே;
தன்னைப் பலியிட்டுத் தரணி மீட்டவர்
நின்னையும் ரட்சிப்பார் , அனைவரைப் பற்று
Gunapadu Paavi Deva Lyrics in English
Kunappadu paavi, thaeva kopam varum maevi – ippo kanappoluthinil kaayam marainthupom kaalamirukkaiyil seelamathaaka nee vaethaththil un thanai paar – antha vaetha vithippati naer neethiyai seythavanaar?- thooya ninmalan vaakka tho koor; theethuraுm paaviyin theemaiyarinthukol; naathan Kristhu ippothae uraikkiraar. Karththanai nee maranthaay – avar karpanaiyaith thuranthaay, pakthiyinmai therinthaay – pollaap paava vali thirinthaay, puththiketta aattuk kuttiyae oti vaa, uththama maeyppanaar kaththi yalaikkiraar thukkamataiyaayo? Paavi thuyaramaakaayo? Mikkap pulampaayo? – manam melinthurukaayo? Ikkanam paavak kasappai yunaraayo? Thakka arumaraip pakkan thodaraayo? Thaavee tharasanaippol – thannaith thaalththum manaaseyaippol paavi manushiyaippol – manam pathaiththa paethurupol, thaevanukkaerkaatha theemaiseythaenentu koovip pulampu nal aaviyin sorpati unnai nee nampaathae! – iv vulakaiyum nampaathae; ponnai nee nampaathae – ep porulaiyum nampaathae; thannaip paliyittuth tharanni meettavar ninnaiyum ratchippaar , anaivaraip pattaு
PowerPoint Presentation Slides for the song Gunapadu Paavi Deva
by clicking the fullscreen button in the Top left.
Or you can download குணப்படு பாவி, தேவ PPT
Kunappadu Paavi, Thaeva PPT

