Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எத்தனை நாவால் துதிப்பேன்

பல்லவி

எத்தனை நாவால் துதிப்பேன்-எந்தன்
கர்த்தா உன் கருணையைப் பாடிப் புகழ்ந்து.

அனுபல்லவி

நினைக்க நினைக்க எந்தன் நெஞ்சமெல்லாம் உருகும்,
நின்னைச் சொல் மாலையால் சூட்டி மகிழும். – எத்தனை

சரணங்கள்

1. நம்பினோரல்லோ அறிவார்-எந்தன்
தம்பிரானே உந்தன் கம்பீர குணம்,
அம்பரா உன் அன்பின் அதிசய நடத்துதல்
சம்பூரண சவரட்சணை செல்வம். – எத்தனை

2. பிரார்த்தனை கேட்கும் பெம்மானே-இந்தப்
பேதை பலவீனம் பாராதருள் கோனே!
சரணென்றுன் செம்பாத மலரடி சேர்ந்தோர்
தாவிப் பிடித்துக் கவலை தீர்த்தோனே! – எத்தனை

3. துணிவாய் என் நெஞ்சே தீவிரமாய்-மிகத்
தொழுது ஆண்டவன் செயல் நினைந்து,
எண்ணில் அடங்காது இறைவனின் கிருபை
விண்ணவன் சேவையில் வீரமாய்ச் செல்லு. – எத்தனை

Eththanai Naavaal Thuthipean – எத்தனை நாவால் துதிப்பேன் Lyrics in English

Pallavi eththanai naavaal thuthippaen-enthan karththaa un karunnaiyaip paatip pukalnthu. Anupallavi ninaikka ninaikka enthan nenjamellaam urukum, ninnaich sol maalaiyaal sootti makilum. – eththanai saranangal 1. Nampinorallo arivaar-enthan thampiraanae unthan kampeera kunam, amparaa un anpin athisaya nadaththuthal sampoorana savaratchannai selvam. – eththanai 2. Piraarththanai kaetkum pemmaanae-inthap paethai palaveenam paaraatharul konae! Sarannentun sempaatha malarati sernthor thaavip pitiththuk kavalai theerththonae! – eththanai 3. Thunnivaay en nenjae theeviramaay-mikath tholuthu aanndavan seyal ninainthu, ennnnil adangaathu iraivanin kirupai vinnnavan sevaiyil veeramaaych sellu. – eththanai

PowerPoint Presentation Slides for the song Eththanai Naavaal Thuthipean – எத்தனை நாவால் துதிப்பேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எத்தனை நாவால் துதிப்பேன் PPT
Eththanai Naavaal Thuthipean PPT

எத்தனை நினைக்க பல்லவி நாவால் துதிப்பேன்எந்தன் கர்த்தா கருணையைப் பாடிப் புகழ்ந்து அனுபல்லவி எந்தன் நெஞ்சமெல்லாம் உருகும் நின்னைச் சொல் மாலையால் சூட்டி மகிழும் சரணங்கள் English