Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எப்போதும் இயேசு நாதா

1. எப்போதும், இயேசு நாதா,
உம்மைப் பின்பற்றுவேன்
என்றே தீர்மானமாக
நான் வாக்குக் கொடுத்தேன்;
நீர் என்னைத் தாங்கிக் காப்பீர்
அப்போது அஞ்சிடேன்;
முன்சென்று பாதை காட்டும்,
நான் வழி தவறேன்.

2. பூலோக இன்பம், செல்வம்
வீண் ஆசாபாசத்தால்
என் ஆத்துமா மயங்காமல்
தெய்வீக பலத்தால்
நீர் துணைநின்று தாங்கும்,
என் அருள் நாயகா;
தீங்கணுகாமல் காரும்,
மா வல்ல ரட்சகா.

3. ஆங்காரம் சுய சித்தம்
தகாத சிந்தையால்
மா கலக்கம் உண்டாகி
நான் தடுமாறினால்,
நீர் பேசும், அருள் நாதா,
கொந்தளிப்படங்கும்;
உம் நேச சத்தம் கேட்டு
என் ஆவி மகிழும்.

4. பின்பற்றினால் விண் வீட்டில்
பேரின்பம் பெறுவீர்,
என்றே உம் சீஷர் நோக்கி
நீர் வாக்கு அளித்தீர்;
அவ்வருள் வாக்கை நம்பி
இவ்வேழை அடியேன்,
இதோ, பின்செல்வேன், என்று
பிரதிக்னை பண்ணினேன்.

5. ஓயாமல் பெலன் தாரும்
உம்மடிச்சுவட்டில்
கால் வைத்து நடந்தேகி
நான் யாத்திரை செய்கையில்
நீர் வழி காட்டி, என்னை
கைதாங்கி வருவீர்;
அப்பாலே மோட்ச வீட்டில்
பேர் வாழ்வை அருள்வீர்

Eppothum Yesu Naatha – எப்போதும் இயேசு நாதா Lyrics in English

1. Eppothum, Yesu naathaa, ummaip pinpattaுvaen ente theermaanamaaka naan vaakkuk koduththaen; neer ennaith thaangik kaappeer appothu anjitaen; munsentu paathai kaattum, naan vali thavaraேn. 2. Pooloka inpam, selvam veenn aasaapaasaththaal en aaththumaa mayangaamal theyveeka palaththaal neer thunnainintu thaangum, en arul naayakaa; theenganukaamal kaarum, maa valla ratchakaa. 3. Aangaaram suya siththam thakaatha sinthaiyaal maa kalakkam unndaaki naan thadumaarinaal, neer paesum, arul naathaa, konthalippadangum; um naesa saththam kaettu en aavi makilum. 4. Pinpattinaal vinn veettil paerinpam peraுveer, ente um seeshar Nnokki neer vaakku aliththeer; avvarul vaakkai nampi ivvaelai atiyaen, itho, pinselvaen, entu pirathiknai pannnninaen. 5. Oyaamal pelan thaarum ummatichchuvattil kaal vaiththu nadanthaeki naan yaaththirai seykaiyil neer vali kaatti, ennai kaithaangi varuveer; appaalae motcha veettil paer vaalvai arulveer

PowerPoint Presentation Slides for the song Eppothum Yesu Naatha – எப்போதும் இயேசு நாதா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எப்போதும் இயேசு நாதா PPT
Eppothum Yesu Naatha PPT

நீர் நாதா என்றே வழி அருள் மா உம் வீட்டில் எப்போதும் இயேசு உம்மைப் பின்பற்றுவேன் தீர்மானமாக வாக்குக் கொடுத்தேன் என்னைத் தாங்கிக் காப்பீர் அப்போது English