Eppothum Neer En – எப்போதும் நீர் என்
எப்போதும் நீர் என் அருகினிலே
இருப்பதை உணர்கிறேன்
ஆனாலும் உம்மை மறந்துவிட்டு
அலைகிறேன் இயேசுவே (2)
புதிதாய் இனிதாய் எந்தன்
வாழ்வும் நிலையாய் மாறும்
தருணம் இனிதான் வந்திடுமோ ?
அனலாய் சில காலம்
குளிராய் சில காலம்
எனையே நான் நொந்து
வாழ்ந்தேன் பல காலம்(2)
ஆடையில் உள்ள வெண்மை
உள்ளில் இல்லையே
வார்த்தைகள் சொல்லும் உண்மை
வாழ்வில் இல்லையே (2)
என்னைக் கண் பாரும் இயேசுவே
யாவும் வெளிவேஷம்
இல்லை விசுவாசம்
வாழ்வு ஆனது தோஷம்
இல்லை சந்தோஷம் (2)
உப்பை போல வாழும் வாழ்வில்
சாரம் இல்லையே
தீபம் போல வாழ வேண்டி
தீயில் வேகிறேன்(2)
அன்பின் கரம் நீட்டும் இயேசுவே
எப்போதும் நீர் என் அருகினிலே
இருப்பதை உணர்கிறேன்
ஆனாலும் உம்மை மறந்துவிட்டு
அலைகிறேன் இயேசுவே (2)
புதிதாய் இனிதாய் எந்தன்
வாழ்வும் நிலையாய் மாறும்
தருணம் இனிதான் வந்திடுமோ ?
எப்போதும.. நீர் என் அருகினிலே
ஆனாலும.. உம்மை மறக்கிறேன்
Eppothum Neer En – எப்போதும் நீர் என் Lyrics in English
Eppothum Neer En – eppothum neer en eppothum neer en arukinilae iruppathai unarkiraேn aanaalum ummai maranthuvittu alaikiraேn Yesuvae (2) puthithaay inithaay enthan vaalvum nilaiyaay maaraுm tharunam inithaan vanthidumo ? Analaay sila kaalam kuliraay sila kaalam enaiyae naan nonthu vaalnthaen pala kaalam(2) aataiyil ulla vennmai ullil illaiyae vaarththaikal sollum unnmai vaalvil illaiyae (2) ennaik kann paarum Yesuvae yaavum velivaesham illai visuvaasam vaalvu aanathu thosham illai santhosham (2) uppai pola vaalum vaalvil saaram illaiyae theepam pola vaala vaennti theeyil vaekiraேn(2) anpin karam neettum Yesuvae eppothum neer en arukinilae iruppathai unarkiraேn aanaalum ummai maranthuvittu alaikiraேn Yesuvae (2) puthithaay inithaay enthan vaalvum nilaiyaay maaraுm tharunam inithaan vanthidumo ? Eppothuma.. Neer en arukinilae aanaaluma.. Ummai marakkiraேn
PowerPoint Presentation Slides for the song Eppothum Neer En – எப்போதும் நீர் என்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download எப்போதும் நீர் என் PPT
Eppothum Neer En PPT

