Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்தன் ஜீவன் இயேசுவே

1. என்தன் ஜீவன், இயேசுவே,
சொந்தமாக ஆளுமே;
எந்தன் காலம் நேரமும்
நீர் கையாடியருளும்.

2. என்தன் கை பேரன்பினால்
ஏவப்படும்; என்தன் கால்
சேவை செய்ய விரையும்,
அழகாக விளங்கும்.

3. என்தன் நாவு இன்பமாய்
உம்மைப் பாடவும், என் வாய்
மீட்பின் செய்தி கூறவும்
ஏதுவாக்கியருளும்.

4. என்தன் ஆஸ்தி, தேவரீர்,
முற்றும் அங்கிகரிப்பீர்;
புத்தி கல்வி யாவையும்
சித்தம்போல் பிரயோகியும்.

5. என்தன் சித்தம், இயேசுவே,
ஒப்புவித்துவிட்டேனே;
என்தன் நெஞ்சில் தங்குவீர்,
அதை நித்தம் ஆளுவீர்.

6. திருப் பாதம் பற்றினேன்;
என்தன் நேசம் ஊற்றினேன்;
என்னையே சமூலமாய்
தத்தம் செய்தேன் நித்தமாய்.

Enthan Jeevan, Yesuvae Lyrics in English

1. Enthan jeevan, Yesuvae, sonthamaaka aalumae; enthan kaalam naeramum neer kaiyaatiyarulum. 2. Enthan kai paeranpinaal aevappadum; enthan kaal sevai seyya viraiyum, alakaaka vilangum. 3. Enthan naavu inpamaay ummaip paadavum, en vaay meetpin seythi kooravum aethuvaakkiyarulum. 4. Enthan aasthi, thaevareer, muttaுm angikarippeer; puththi kalvi yaavaiyum siththampol pirayokiyum. 5. Enthan siththam, Yesuvae, oppuviththuvittaேnae; enthan nenjil thanguveer, athai niththam aaluveer. 6. Thirup paatham pattinaen; enthan naesam oottinaen; ennaiyae samoolamaay thaththam seythaen niththamaay.

PowerPoint Presentation Slides for the song Enthan Jeevan, Yesuvae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்தன் ஜீவன் இயேசுவே PPT
Enthan Jeevan PPT

என்தன் இயேசுவே ஜீவன் சொந்தமாக ஆளுமே எந்தன் காலம் நேரமும் நீர் கையாடியருளும் கை பேரன்பினால் ஏவப்படும் கால் சேவை செய்ய விரையும் அழகாக English