Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் மேய்ப்பர் இயேசு

1. என் மேய்ப்பர் இயேசு கிறிஸ்துதான்,
நான் தாழ்ச்சியடையேனே;
ஆட்கொண்டோர் சொந்தமான நான்
குறையடைகிலேனே.

2. ஜீவாற்றில் ஓடும் தண்ணீரால்
என் ஆத்மத் தாகம் தீர்ப்பார்;
மெய் மன்னாவாம் தம் வார்த்தையால்
நல் மேய்ச்சல் எனக்கீவார்.

3. நான் பாதை விட்டு ஓடுங்கால்
அன்பாகத் தேடிப் பார்ப்பார்;
தோள்மீதில் ஏற்றிக் காப்பதால்
மகா சந்தோஷங்கொள்வார்.

4. சா நிழல் பள்ளத்தாக்கிலே
நான் போக நேரிட்டாலும்,
உன் அன்பின் கோலைப் பற்றவே,
அதே என் வழி காட்டும்.

5. இவ்வேழைக்கும் ஓர் பந்தியை
பகைஞர்க்கெதிர் வைத்தீர்;
உம்மாவியால் என் சிரசை
தைலாபிஷேகம் செய்வீர்.

6. என் ஆயுள் எல்லாம் என் பாத்திரம்
நிரம்பி வழிந்தோடும்;
ஜீவாற்றின் நீரால் என்னுள்ளம்
நிறைந்து பொங்கிப் பாயும்.

7. என் ஜீவ காலம் முற்றிலும்
கடாட்சம் பெற்று வாழ்வேன்;
கர்த்தாவின் வீட்டில் என்றைக்கும்
நான் தங்கிப் பூரிப்பாவேன்.

En Meippar Yesu – என் மேய்ப்பர் இயேசு Lyrics in English

1. En maeyppar Yesu Kristhuthaan, naan thaalchchiyataiyaenae; aatkonntoor sonthamaana naan kuraiyataikilaenae. 2. Jeevaattil odum thannnneeraal en aathmath thaakam theerppaar; mey mannaavaam tham vaarththaiyaal nal maeychchal enakgeevaar. 3. Naan paathai vittu odungaal anpaakath thaetip paarppaar; tholmeethil aettik kaappathaal makaa santhoshangaொlvaar. 4. Saa nilal pallaththaakkilae naan poka naerittalum, un anpin kolaip pattavae, athae en vali kaattum. 5. Ivvaelaikkum or panthiyai pakainjarkkethir vaiththeer; ummaaviyaal en sirasai thailaapishaekam seyveer. 6. En aayul ellaam en paaththiram nirampi valinthodum; jeevaattin neeraal ennullam nirainthu pongip paayum. 7. En jeeva kaalam muttilum kadaatcham pettaு vaalvaen; karththaavin veettil entaikkum naan thangip poorippaavaen.

PowerPoint Presentation Slides for the song En Meippar Yesu – என் மேய்ப்பர் இயேசு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் மேய்ப்பர் இயேசு PPT
En Meippar Yesu PPT

மேய்ப்பர் இயேசு கிறிஸ்துதான் தாழ்ச்சியடையேனே ஆட்கொண்டோர் சொந்தமான குறையடைகிலேனே ஜீவாற்றில் ஓடும் தண்ணீரால் ஆத்மத் தாகம் தீர்ப்பார் மெய் மன்னாவாம் தம் வார்த்தையால் நல் மேய்ச்சல் English