Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் மனது துடிக்குது

1. என் மனது
துடிக்குது
குலைபதைத்து நோகும்
தேவமைந்தனின் உடல்
கல்லறைக்குப் போகும்.

2.ஆ, அவரே,
மரத்திலே
அறையப் பட்டிறந்தார்
கர்த்தர் தாமே பாவியின்,
சாவத்தைச் சுமந்தார்.

3.என் பாவத்தால்,
என் தீங்கினால்
இக்கேடுண்டாயிருக்கும்;
ஆகையால் என்னுள்ளத்தில்
தத்தளிப்பெடுக்கும்.

4.என் ஆண்டவர்,
என் ரட்சகர்
வதைந்த மேனியாக
ரத்தமாய்க் கிடக்கின்றார்
என் ரட்சிப்புக்காக.

5.வெட்டுண்டோரே,
ஆ, உம்மையே
பணிந்தேன் ஆவிபேணும்,
ஆகிலும் என் நிமித்தம்,
நான் புலம்பவேண்டும்.

6.குற்றமில்லா
மகா கர்த்தா
உமது ரத்தம் ஊறும்;
மனந்தாபமின்றி யார்
அதைப் பார்க்கக் கூடும்.

7.ஆ, இயேசுவே,
என் ஜீவனே,
நீர் கல்லறைக்குள்ளாக
வைக்கப்பட்டதைத் தினம்
நான் சிந்திப்பேனாக.

8.நான் மிகவும்
எந்நேரமும்
என் மரணநாள் மட்டும்,
என் கதியாம் இயேசுவே,
உம்மை வாஞ்சிக்கட்டும்.

En Manathu Thudikuthu – என் மனது துடிக்குது Lyrics in English

1. En manathu thutikkuthu kulaipathaiththu Nnokum thaevamainthanin udal kallaraikkup pokum. 2.aa, avarae, maraththilae araiyap pattiranthaar Karththar thaamae paaviyin, saavaththaich sumanthaar. 3.en paavaththaal, en theenginaal ikkaedunndaayirukkum; aakaiyaal ennullaththil thaththalippedukkum. 4.en aanndavar, en ratchakar vathaintha maeniyaaka raththamaayk kidakkintar en ratchippukkaaka. 5.vettunntoorae, aa, ummaiyae panninthaen aavipaenum, aakilum en nimiththam, naan pulampavaenndum. 6.kuttamillaa makaa karththaa umathu raththam ooraுm; mananthaapaminti yaar athaip paarkkak koodum. 7.aa, Yesuvae, en jeevanae, neer kallaraikkullaaka vaikkappattathaith thinam naan sinthippaenaaka. 8.naan mikavum ennaeramum en marananaal mattum, en kathiyaam Yesuvae, ummai vaanjikkattum.

PowerPoint Presentation Slides for the song En Manathu Thudikuthu – என் மனது துடிக்குது

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் மனது துடிக்குது PPT
En Manathu Thudikuthu PPT

இயேசுவே மனது துடிக்குது குலைபதைத்து நோகும் தேவமைந்தனின் உடல் கல்லறைக்குப் போகும் அவரே மரத்திலே அறையப் பட்டிறந்தார் கர்த்தர் தாமே பாவியின் சாவத்தைச் சுமந்தார் English