1.என் ஜீவன் போகும்
நேரம் சமீபம் வந்ததே ;
பேரின்ப அருணோதயம் ,
இதோ! விடிந்ததே ;
ராக் கால மோசம் நீங்கும்
வின் சுடரொளியில் ;
மா அருள் ஜோதி வீசும்
பேரின்ப தேசத்தில்.
2.ஆ, நேச ஜீவ ஊற்று
என் அருள் நாதரே !
ஈண்டுண்ணும் ஜீவ தண்ணீர்
அங்காழி போலாமே ;
பேரன்பின் பெருவெள்ளம்
பாய்ந்தோடும் மோட்சத்தில் ;
மா அருள் ஜோதி வீசும்
பேரின்ப மோட்சத்தில்;
3. அன்போடும் நீதியோடும்
என் சுக துக்கமும்
ஆண்டென்னைப் பாதுகாத்து
வந்தார் எந்நேரமும் ;
ஆ! போற்றுவேன் தெய்வன்பை
ஆனந்த கடலில் ;
மா அருள் ஜோதி வீசும்
பேரின்ப தேசத்தில் .
4. நல் நித்திரை செய்து
பின்பு மாசற்றெழும்புவேன் ;
ன் மீட்பரை நான் கண்டு
ஆனந்தம் அடைவேன் ;
ராஜாதி ராஜன் என்னை
அழைக்கும் நேரத்தில்
மா அருள் ஜோதி வீசும்
பேரின்ப தேசத்தில் .
5. தன் ஆடையைப் பாராமல்
பர்த்தாவின் முகத்தை
பத்தினி நோக்குமாறு ,
நான் ஜீவ கீரடத்தை
நோக்காமல் , மீட்பர் மாண்பை
பார்ப்பேன் அவ்வேளையில் ;
இம்மானுவேலே ஜோதி
பேரின்ப தேசத்தில்
En Jeevan Pogum – என் ஜீவன் போகும் Lyrics in English
1.en jeevan pokum naeram sameepam vanthathae ; paerinpa arunnothayam , itho! Vitinthathae ; raak kaala mosam neengum vin sudaroliyil ; maa arul jothi veesum paerinpa thaesaththil. 2.aa, naesa jeeva oottaு en arul naatharae ! Eenndunnnum jeeva thannnneer angaali polaamae ; paeranpin peruvellam paaynthodum motchaththil ; maa arul jothi veesum paerinpa motchaththil; 3. Anpodum neethiyodum en suka thukkamum aanndennaip paathukaaththu vanthaar ennaeramum ; aa! Pottaுvaen theyvanpai aanantha kadalil ; maa arul jothi veesum paerinpa thaesaththil . 4. Nal niththirai seythu pinpu maasattelumpuvaen ; n meetparai naan kanndu aanantham ataivaen ; raajaathi raajan ennai alaikkum naeraththil maa arul jothi veesum paerinpa thaesaththil . 5. Than aataiyaip paaraamal parththaavin mukaththai paththini Nnokkumaaraு , naan jeeva geeradaththai Nnokkaamal , meetpar maannpai paarppaen avvaelaiyil ; immaanuvaelae jothi paerinpa thaesaththil
PowerPoint Presentation Slides for the song En Jeevan Pogum – என் ஜீவன் போகும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் ஜீவன் போகும் PPT
En Jeevan Pogum PPT

