Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவனே நான் உமதண்டையில்

தேவனே நான் உமதண்டையில் — இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்

மா வலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
கோவே! தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் — தேவனே

யாக்கோபைப் போல் போகும் பாதையில் — பொழுதுபட்டு
இராவில் இருள் வந்து மூடிட
துக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து, தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன் வாக்கடங்கா நல்ல நாதா — தேவனே

பரத்திற்கேறும் படிகள் போலவே — என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா என்றன் தேவனே
கிருபையாக நீர் எனக்கு தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னை அழைத்து
அன்பின் தூதனாகச் செய்யும் — தேவனே

நித்திரையினின்று விழித்து — காலை எழுந்து
கர்த்தாவே! நான் உம்மைப் போற்றுவேன்
இத்தரையில் உந்தன் வீடாய், என் துயர் கல் நாட்டுவேனே
என்றான் துன்பத்தின் வழியாய்
இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் — தேவனே

ஆனந்தமாம் செட்டை விரித்து — பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங்கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மை
கிட்டிச் சேர்வேன் — தேவனே

Devane Naan Umathandaiyil – தேவனே நான் உமதண்டையில் Lyrics in English

Thaevanae naan umathanntaiyil — innum nerungich servathae en aaval poomiyil maa valiya koramaaka van siluvai meethinil naan kovae! Thonga naeritinum aavalaay ummanntai servaen — thaevanae yaakkopaip pol pokum paathaiyil — poluthupattu iraavil irul vanthu mootida thukkaththaal naan kallil saaynthu, thoonginaalum en kanaavil Nnokkiyummaik kittich servaen vaakkadangaa nalla naathaa — thaevanae paraththirkaeraுm patikal polavae — en paathai thontap pannnum aiyaa entan thaevanae kirupaiyaaka neer enakku tharuvathellaam umathanntai arumaiyaay ennai alaiththu anpin thoothanaakach seyyum — thaevanae niththiraiyinintu viliththu — kaalai elunthu karththaavae! Naan ummaip pottaுvaen iththaraiyil unthan veedaay, en thuyar kal naattuvaenae entan thunpaththin valiyaay innum ummaik kittich servaen — thaevanae aananthamaam settaை viriththu — paravasamaay aakaayaththil aerip poyinum vaana manndalangadanthu paranthu maelae sentitinum makilvuraு kaalaththilum naan maruviyummai kittich servaen — thaevanae

PowerPoint Presentation Slides for the song Devane Naan Umathandaiyil – தேவனே நான் உமதண்டையில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவனே நான் உமதண்டையில் PPT
Devane Naan Umathandaiyil PPT

தேவனே சேர்வேன் கிட்டிச் உமதண்டையில் நெருங்கிச் சேர்வதே ஆவல் பூமியில் மா வலிய கோரமாக வன் சிலுவை மீதினில் கோவே தொங்க நேரிடினும் ஆவலாய் English