Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவா திருக்கடைக்கண் பார்

தேவா, திருக்கடைக்கண் பார்

பல்லவி

தேவா, திருக்கடைக்கண் பார், ஐயா!
வினைதீர், ஐயா, வினைதீர், ஐயா.

அனுபல்லவி

கோவாய் உலகில் வந்த யோவா, சச்சிதானந்தா! – தேவா

சரணங்கள்

1. மேவிய தயை நிரம்பி, ஆவலுடனே விரும்பி,
பாவி எனையே திரும்பிப் பார், ஐயா, ஸ்வாமி! – தேவா

2. பொல்லா உலகம் பகை, எல்லாச் செல்வமும் புகை;
வல்லா, உனின் கிருபை கூர், ஐயா, ஸ்வாமி. – தேவா

3. அந்தி சந்தியும் விடாமல், தந்திரப் பசாசடாமல்,
எந்த விதமும் கெடாமல் ஆளுமே, ஸ்வாமி! – தேவா

4. சர்ப்பனை[1] யதாய் உலகம் இப்படித் துரோகம் செய்தால்,
எப்படி அடிமை கரை யேறுவேன், ஸ்வாமி! – தேவா

5. எத்தனை துயர் அடைந்தேன்! மெத்தவும் மன துடைந்தேன்;
சித்தம் இரங்காய், என் மணவாளனே, ஸ்வாமி! – தேவா

6. இந்தத் தினத்தில் எனக்குத் தந்த சுகத்துக்குனக்கு
வந்தனம்! அனந்தனந்தம் ஸ்தோத்திரமே, ஸ்வாமி! – தேவா

Devaa Thirukadaikan Paar – தேவா திருக்கடைக்கண் பார் Lyrics in English

thaevaa, thirukkataikkann paar

pallavi

thaevaa, thirukkataikkann paar, aiyaa!
vinaitheer, aiyaa, vinaitheer, aiyaa.

anupallavi

kovaay ulakil vantha yovaa, sachchithaananthaa! – thaevaa

saranangal

1. maeviya thayai nirampi, aavaludanae virumpi,
paavi enaiyae thirumpip paar, aiyaa, svaami! – thaevaa

2. pollaa ulakam pakai, ellaach selvamum pukai;
vallaa, unin kirupai koor, aiyaa, svaami. – thaevaa

3. anthi santhiyum vidaamal, thanthirap pasaasadaamal,
entha vithamum kedaamal aalumae, svaami! – thaevaa

4. sarppanai[1] yathaay ulakam ippatith thurokam seythaal,
eppati atimai karai yaeruvaen, svaami! – thaevaa

5. eththanai thuyar atainthaen! meththavum mana thutainthaen;
siththam irangaay, en manavaalanae, svaami! – thaevaa

6. inthath thinaththil enakkuth thantha sukaththukkunakku
vanthanam! ananthanantham sthoththiramae, svaami! – thaevaa

PowerPoint Presentation Slides for the song Devaa Thirukadaikan Paar – தேவா திருக்கடைக்கண் பார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவா திருக்கடைக்கண் பார் PPT
Devaa Thirukadaikan Paar PPT

தேவா ஸ்வாமி ஐயா பார் திருக்கடைக்கண் வினைதீர் உலகம் பல்லவி அனுபல்லவி கோவாய் உலகில் யோவா சச்சிதானந்தா சரணங்கள் மேவிய தயை நிரம்பி ஆவலுடனே விரும்பி English