Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவ தயாபரனை துதிப்பதில்

Deva Dhayabaranai Thuthipathil – தேவ தயாபரனை துதிப்பதில்

பல்லவி

தேவ தயாபரனைத் – துதிப்பதில்
ஓய்வதில்லை இனிமேல்

சரணங்கள்

1 அற்புத கரத்தைக் கொண்டடியாரைக் காத்தணைத்தார்
அனுதினம் சாற்றிடுவேன் அன்பருக்குத் தோத்திரமே— தேவ

2 அண்டி நெருங்கினோரை இன்று வரையும் தாங்கி
அன்றன்று வேண்டியதை அன்புடன் அளித்து வைத்தார்- தேவ

3 கண்ணிகளுக்குத் தப்பி கண்மணி போல என்னை
எண்ணியே ஆதரித்த ஏகனையே தோத்திரிப்பேன்- தேவ

4 அன்னை தந்தையின் மேலாய் ஆதரித்தாரே தாங்கி
என்னைத் தன் சொந்தமாக ஏற்றுக்கொண்டார் தோத்திரமே
— தேவ

5 மன்னவன் இயேசு தாமே மகிமையில் தோன்றுகையில்
மணவாட்டியாக நானும் வானத்திலே சேர்ந்திடுவேன்— தேவ

6 எப்படிப் போற்றுவேனோ என்னரும் நேசரையே
ஏத்தியே எப்பொழுதும் தோத்திரங்கள் ஏறெடுப்பேன். — தேவ

Deva Dhayabaranai Thuthipathil – தேவ தயாபரனை துதிப்பதில் Lyrics in English

Deva Dhayabaranai Thuthipathil – thaeva thayaaparanai thuthippathil pallavi thaeva thayaaparanaith – thuthippathil oyvathillai inimael saranangal 1 arputha karaththaik konndatiyaaraik kaaththannaiththaar anuthinam saattiduvaen anparukkuth thoththiramae— thaeva 2 annti nerunginorai intu varaiyum thaangi antantu vaenntiyathai anpudan aliththu vaiththaar- thaeva 3 kannnnikalukkuth thappi kannmanni pola ennai ennnniyae aathariththa aekanaiyae thoththirippaen- thaeva 4 annai thanthaiyin maelaay aathariththaarae thaangi ennaith than sonthamaaka aettaுkkonndaar thoththiramae — thaeva 5 mannavan Yesu thaamae makimaiyil thontukaiyil manavaattiyaaka naanum vaanaththilae sernthiduvaen— thaeva 6 eppatip pottaுvaeno ennarum naesaraiyae aeththiyae eppoluthum thoththirangal aeraெduppaen. — thaeva

PowerPoint Presentation Slides for the song Deva Dhayabaranai Thuthipathil – தேவ தயாபரனை துதிப்பதில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவ தயாபரனை துதிப்பதில் PPT
Deva Dhayabaranai Thuthipathil PPT

தேவ துதிப்பதில் தாங்கி Deva Dhayabaranai Thuthipathil தயாபரனை பல்லவி தயாபரனைத் ஓய்வதில்லை இனிமேல் சரணங்கள் அற்புத கரத்தைக் கொண்டடியாரைக் காத்தணைத்தார் அனுதினம் சாற்றிடுவேன் English