Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அந்தோ சிலுவைப் பவனி

சரணங்கள்

1. அந்தோ சிலுவைப் பவனி பார் – நமது
ஆண்டவர் படுந்துயர் ஆறுமோ – நாம்
அழுதாலுந்தான் தீருமோ – குரு
சன்றி மீட்பு ஒப்பேறுமா – சகி சகி

2. தோளில் பாரம் அழுந்தவே – அவர்
தேய்ந்து கீழே விழுகிறார் – ஐயோ
தூக்கிவிடுவார் இல்லையோ – மா
தோஷி என்னால் இத்தொல்லையோ – சகி சகி

3. தூக்கென்றவரை அதட்டுறான் – ஒரு
தோஷி முறுக்கிப் பிதற்றுறான் – அங்கே
துடுக்காய் சவுக்கை சுழற்றுறான் – ஒருவன்
தொந்தரை செய்தே அலட்டுறான் – சகி சகி

4. மெல்ல இயேசு நடக்கிறார் – வேர்த்து
மெய் சோர்ந் துடைந்து சடைக்கிறார் – தம்மைப்
பலியாய் விருப்புடன் படைக்கிறார் – எந்தன்
பாவக் கடன்களை அடைக்கிறார் – சகி சகி

5. மாதா ஏங்கித் தேம்புறாள் – நன்மை
வாங்கினோர் புலம்பி ஏங்குறார் – சீமோன்
மதிசோர்ந்து குருசைத் தாங்குறான் – ஐயோ
மருகி யோவான் முகம் வீங்குறான் – சகி சகி

6. கல்வாரி மலையில் ஏறுகிறார் – மெய்
கருகி அன்பர் சோர்கிறார் – சாலேம்
மாதர் புலம்பி அழுகிறார் – அவர்க்
காறுதல் மொழிகள் கூறுகிறார் – சகி சகி

7. சோலையில் வந்த பாவத்தால் இயேசு
சாலையின் வழியே போகிறார் – அலங்
கோலமாகி என்னால் சாகிறார் – தேவ
கோபாக்கினையில் வேகிறார் – சகி சகி

அந்தோ சிலுவைப் பவனி – Antho Siluvai Pavani Lyrics in English

Saranangal 1. Antho siluvaip pavani paar – namathu aanndavar padunthuyar aaraுmo – naam aluthaalunthaan theerumo – kuru santi meetpu oppaeraுmaa – saki saki 2. Tholil paaram alunthavae – avar thaeynthu geelae vilukiraar – aiyo thookkividuvaar illaiyo – maa thoshi ennaal iththollaiyo – saki saki 3. Thookkentavarai athatturaan – oru thoshi muraுkkip pithattaுraan – angae thudukkaay savukkai sulattaுraan – oruvan thontharai seythae alatturaan – saki saki 4. Mella Yesu nadakkiraar – vaerththu mey sorn thutainthu sataikkiraar – thammaip paliyaay viruppudan pataikkiraar – enthan paavak kadankalai ataikkiraar – saki saki 5. Maathaa aengith thaempuraal – nanmai vaanginor pulampi aenguraar – seemon mathisornthu kurusaith thaanguraan – aiyo maruki yovaan mukam veenguraan – saki saki 6. Kalvaari malaiyil aeraுkiraar – mey karuki anpar sorkiraar – saalaem maathar pulampi alukiraar – avark kaaraுthal molikal kooraுkiraar – saki saki 7. Solaiyil vantha paavaththaal Yesu saalaiyin valiyae pokiraar – alang kolamaaki ennaal saakiraar – thaeva kopaakkinaiyil vaekiraar – saki saki

PowerPoint Presentation Slides for the song அந்தோ சிலுவைப் பவனி – Antho Siluvai Pavani

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அந்தோ சிலுவைப் பவனி PPT
Antho Siluvai Pavani PPT

சகி ஐயோ தோஷி என்னால் இயேசு மெய் புலம்பி சரணங்கள் அந்தோ சிலுவைப் பவனி பார் நமது ஆண்டவர் படுந்துயர் ஆறுமோ அழுதாலுந்தான் தீருமோ குரு English