Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அன்பே என்னாருயிரே

பல்லவி

அன்பே! என்னாருயிரே
இன்பே! எனதரணே!

அனுபல்லவி

துன்பமுறு முலகில் தூயா! நீயே என் கோனே!

சரணங்கள்

1. என்றும் உம்மை நேசிப்பேன்
என் முழு பலத்தாலே,
உந்தன் செயல்களையே
நன்றாகத் தியானிப்பேனே – அன்பே

2. எத்தனை நாளாக நான்
உத்தம வேந்தே! உமை
பக்தியாய்ப் பணியாமல்
கர்த்தா! உமை வஞ்சித்தேன் – அன்பே

3. தூய நல் மனதாலும்
மாய மில்லாதன்பாலும்;
நேய னுமை சேவிக்க
தூய ஆவி தந்தாளும்! – அன்பே

4. அனாதியானவனே!
அற்பன் மேல் அன்புற்றோனே!
தினமு மும்மைப் பின் பற்ற
தேவே எனையாக்குமேன்! – அன்பே

5. முச் சத்துருக்கள் என்னை
அச்சமுறத் தாக்கையில்
அட்சயன் இயேசு நாதா!
பட்சமாய்க் காருமென்னை – அன்பே

6. இந்த நீதிப் பாதையில்
உந்தனடி பின் சென்று
சந்ததமுந் திடனாய்
எந்தாய் நடக்கச் செய்வாய்! – அன்பே

7. பரன் உம்மைத் தேடாமலே
நரகத்திற் கேகுவோரை
விரைவில் நல்வழி சேர்க்க
கரையு மென்னுள்ளம் அன்பால்! – அன்பே

Anbae Ennaaruyirae – அன்பே என்னாருயிரே Lyrics in English

pallavi

anpae! ennaaruyirae
inpae! enatharannee!

anupallavi

thunpamutru mulakil thooyaa! neeyae en konae!

saranangal

1. entum ummai naesippaen
en mulu palaththaalae,
unthan seyalkalaiyae
nantakath thiyaanippaenae – anpae

2. eththanai naalaaka naan
uththama vaenthae! umai
pakthiyaayp panniyaamal
karththaa! umai vanjiththaen – anpae

3. thooya nal manathaalum
maaya millaathanpaalum;
naeya numai sevikka
thooya aavi thanthaalum! – anpae

4. anaathiyaanavanae!
arpan mael anputtaோnae!
thinamu mummaip pin patta
thaevae enaiyaakkumaen! – anpae

5. much saththurukkal ennai
achchamurath thaakkaiyil
atchayan Yesu naathaa!
patchamaayk kaarumennai – anpae

6. intha neethip paathaiyil
unthanati pin sentu
santhathamun thidanaay
enthaay nadakkach seyvaay! – anpae

7. paran ummaith thaedaamalae
narakaththir kaekuvorai
viraivil nalvali serkka
karaiyu mennullam anpaal! – anpae

PowerPoint Presentation Slides for the song Anbae Ennaaruyirae – அன்பே என்னாருயிரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்பே என்னாருயிரே PPT
Anbae Ennaaruyirae PPT

அன்பே உமை தூய பல்லவி என்னாருயிரே இன்பே எனதரணே அனுபல்லவி துன்பமுறு முலகில் தூயா நீயே கோனே சரணங்கள் உம்மை நேசிப்பேன் முழு பலத்தாலே உந்தன் English