Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆவியை மழைபோலே யூற்றும் பல

ஆவியை மழைபோலே யூற்றும், – பல
ஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும்.
அனுபல்லவி

பாவிக்காய் ஜீவனைவிட்ட கிறிஸ்தே,
பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும், — ஆவியை
சரணங்கள்

1. அன்பினால் ஜீவனை விட்டீர் – ஆவி
அருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்
இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ
ஏராளமான ஜனங்களைச் சேரும். — ஆவியை

2. சிதறுண்டலைகிற ஆட்டைப் – பின்னும்
தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து,
பதறாதே நான்தான் உன் நல் மேய்ப்பன் யேசு
பாக்கியரென்னும் நல் வாக்கையருளும். — ஆவியை

3. காத்திருந்த பல பேரும் – மனங்
கடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்
தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து
சுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும். — ஆவியை

4. தோத்திரக் கீதங்கள் பாடி – எங்கும்
சுவிஷேச ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப்
பாத்திரராக அநேகரெழும்பப்
பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும். — ஆவியை

Aaviyai Malai Pool Ootrum Lyrics in English

Aaviyai malaipolae yoottaுm, – pala aadukalai yaesu manthaiyir koottum. Anupallavi paavikkaay jeevanaivitta kiristhae, parinthu neer paesiyae irangidach seyyum, — aaviyai saranangal 1. Anpinaal jeevanai vittir – aavi arul maari poliyavae paralokanj senteer inpap perukkilae pongi makila aeraalamaana janangalaich serum. — aaviyai 2. Sitharaுnndalaikira aattaைp – pinnum thaetip pitiththu neer thookkich sumanthu, patharaathae naanthaan un nal maeyppan yaesu paakkiyarennum nal vaakkaiyarulum. — aaviyai 3. Kaaththiruntha pala paerum – manang katinangaொllaa munnae um paathanj serum thoththirak geethangal paatip pukalnthu suththalokam varath thooyaavi oottaுm. — aaviyai 4. Thoththirak geethangal paati – engum suvishaesa jeyaththaiyae nitham nitham thaetip paaththiraraaka anaekarelumpap Parisuththa aaviyin arulmaari oottaுm. — aaviyai

PowerPoint Presentation Slides for the song Aaviyai Malai Pool Ootrum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆவியை மழைபோலே யூற்றும் பல PPT
Aaviyai Malai Pool Ootrum PPT

ஆவியை நீர் நல் கீதங்கள் ஊற்றும் நிதம் மழைபோலே யூற்றும் பலஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும்அனுபல்லவி பாவிக்காய் ஜீவனைவிட்ட கிறிஸ்தேபரிந்து பேசியே இறங்கிடச் English