Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆர் இவர் ஆராரோ

ஆர் இவர் ஆராரோ – இந்த அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் ?

1. பாருருவாகுமுன்னே – இருந்த
பரப்பொருள் தானிவரோ?
சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ்
சிருஷ்டித்த மாவலரோ? – ஆர்

2. மேசியா இவர்தானோ? – நம்மை
மேய்த்திடும் நரர்கோனோ?
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி
அன்புள்ள மனசானோ? – ஆர்

3. தித்திக்குந் தீங்கனியோ? – நமது
தேவனின் கண்மணியோ?
மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசய
மேவிய விண் ஒளியோ? – ஆர்

4. பட்டத்துத் துரைமகனோ? – நம்மை
பண்புடன் ஆள்பவனோ?
கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக்
காட்டிடுந் தாயகனோ? – ஆர்

5. ஜீவனின் அப்பமோதான்? – தாகம்
தீர்த்திடும் பானமோதான்?
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல
மானவர் இவர்தானோ? – ஆர்

Aarivararaaro Aar Evar Aararo – ஆர் இவர் ஆராரோ Lyrics in English

Aar ivar aaraaro – intha avaniyor maathidamae aanatai kutilitai monamaay uthiththa ivvarputha paalakanaar ? 1. Paaruruvaakumunnae – iruntha parapporul thaanivaro? Seerudan puvi vaan avai porul yaavaiyunj sirushtiththa maavalaro? – aar 2. Maesiyaa ivarthaano? – nammai maeyththidum nararkono? Aasaiyaay manitharukkaay mariththidum athi anpulla manasaano? – aar 3. Thiththikkun theenganiyo? – namathu thaevanin kannmanniyo? Meththavae ulakirul neekkidum athisaya maeviya vinn oliyo? – aar 4. Pattaththuth thuraimakano? – nammai pannpudan aalpavano? Kattalai meeridum yaavarkkum mannippuk kaatdidun thaayakano? – aar 5. Jeevanin appamothaan? – thaakam theerththidum paanamothaan? Aavalaay aelaikal atainthidum ataikkala maanavar ivarthaano? – aar

PowerPoint Presentation Slides for the song Aarivararaaro Aar Evar Aararo – ஆர் இவர் ஆராரோ

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆர் இவர் ஆராரோ PPT
Aarivararaaro Aar Evar Aararo PPT

ஆர் இவர்தானோ நம்மை ஆராரோ அவனியோர் மாதிடமே ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் பாருருவாகுமுன்னே பரப்பொருள் தானிவரோ சீருடன் புவி வான் பொருள் English