Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆர் இவர் ஆராரோ இந்த அவனியோர் மாதிடமே

ஆர் இவர் ஆராரோ – இந்த – அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத
பாலகனார் ?

1. பாருருவாகுமுன்னே – இருந்த – பரப் பொருள் தானிவரோ ?
சீருடன் புவி , வான் , அவை பொருள் யாவையுஞ் சிருட்டித்த
மாவலரோ ? — ஆர்

2. மேசியா இவர்தானோ ? – நம்மை – மேய்த்திடும் நரர்கோனோ ?
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள
மனசானோ ? — ஆர்

3. தித்திக்குந் தீங்கனியோ ? – நமது தேவனின் கண்மணியோ ?
மெத்தவே உலகிறுள் நீக்கிடும் அதிசயமேவிய விண்
ணொளியோ ? — ஆர்

4. பட்டத்துத் துரைமகனோ ? – நம்மைப் – பண்புடன் ஆள்பவனோ ?
கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக் காட்டிடுந்
தாயகனோ ? — ஆர்

5. ஜீவனின் அப்பமோதான் ? – தாகம் தீர்த்திடும்பானமோதான் ?
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல மானவர்
இவர்தானோ ? — ஆர்

Aar Ivar Aaraaro Lyrics in English

Aar ivar aaraaro – intha – avaniyor maathidamae aanatai kutilitai monamaay uthiththa ivvarputha paalakanaar ? 1. Paaruruvaakumunnae – iruntha – parap porul thaanivaro ? Seerudan puvi , vaan , avai porul yaavaiyunj siruttiththa maavalaro ? — aar 2. Maesiyaa ivarthaano ? – nammai – maeyththidum nararkono ? Aasaiyaay manitharukkaay mariththidum athi anpulla manasaano ? — aar 3. Thiththikkun theenganiyo ? – namathu thaevanin kannmanniyo ? Meththavae ulakiraுl neekkidum athisayamaeviya vinn nnoliyo ? — aar 4. Pattaththuth thuraimakano ? – nammaip – pannpudan aalpavano ? Kattalai meeridum yaavarkkum mannippuk kaatdidun thaayakano ? — aar 5. Jeevanin appamothaan ? – thaakam theerththidumpaanamothaan ? Aavalaay aelaikal atainthidum ataikkala maanavar ivarthaano ? — aar

PowerPoint Presentation Slides for the song Aar Ivar Aaraaro

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆர் இவர் ஆராரோ இந்த அவனியோர் மாதிடமே PPT
Aar Ivar Aaraaro PPT

ஆர் பொருள் இவர்தானோ ஆராரோ அவனியோர் மாதிடமே ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் பாருருவாகுமுன்னே பரப் தானிவரோ சீருடன் புவி வான் English