Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆ இன்ப இல்லமே! நீ என்றும்

1. ஆ இன்ப இல்லமே! நீ என்றும்

தழைத்து வாழ்க;

அன்புடன் பாலர் யாரும் அங்கு

ஐக்கியமாய் ஓங்க;

அன்னை தந்தை

ஆவலாய்ப் பாலகரை

ஆண்டவன் பாதம் படைக்க.

2. ஆ இன்ப இல்லமே! உன் செல்வம்

சுகம் தழைக்க;

உன் மக்கள் யாவரும் ஓர் வேலை

உகந்து செய்ய;

பக்தியுடன்

பற்பல சேவை ஆற்றி,

கர்த்தன் அருள் பெற்று ஓங்க.

3. ஆ இன்ப இல்லமே! நன்மை

பெருகும் அந்நாளில்

ஆண்டவர் நாமத்தை ஆர்வ

நன்றியுடன் போற்று;

துன்பம் துக்கம்

துயரம் தொடர் நாளில்

அன்றும் அவரைக் கொண்டாடு.

4. ஆ இன்ப இல்லமே! உன்

உண்மை நண்பர் கிறிஸ்தேசு;

அன்பர் அவர் பிரசன்னம் உன்னை

என்றும் நடத்தும்;

இவ்வாழ்வின்பின்

உன் மக்களை அவரே
விண்ணோடு சேர்த்துக் காப்பாரே.

Aa Inpa Illamae! Lyrics in English

1. Aa inpa illamae! Nee entum thalaiththu vaalka; anpudan paalar yaarum angu aikkiyamaay onga; annai thanthai aavalaayp paalakarai aanndavan paatham pataikka. 2. Aa inpa illamae! Un selvam sukam thalaikka; un makkal yaavarum or vaelai ukanthu seyya; pakthiyudan parpala sevai aatti, karththan arul pettaு onga. 3. Aa inpa illamae! Nanmai perukum annaalil aanndavar naamaththai aarva nantiyudan pottaு; thunpam thukkam thuyaram thodar naalil antum avaraik konndaadu. 4. Aa inpa illamae! Un unnmai nannpar kiristhaesu; anpar avar pirasannam unnai entum nadaththum; ivvaalvinpin un makkalai avarae vinnnnodu serththuk kaappaarae.

PowerPoint Presentation Slides for the song Aa Inpa Illamae!

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆ இன்ப இல்லமே! நீ என்றும் PPT
Aa Inpa Illamae PPT

இன்ப இல்லமே ஓங்க தழைத்து வாழ்க அன்புடன் பாலர் யாரும் ஐக்கியமாய் அன்னை தந்தை ஆவலாய்ப் பாலகரை ஆண்டவன் பாதம் படைக்க செல்வம் English