பிற்பாடு வந்து, என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயத்திலே எனக்கு முன்பாக நின்று: இந்த அருவருப்புகளையெல்லாம் செய்வதற்காக விடுதலை பெற்றிருக்கிறோமென்று சொல்வீர்களோ?
என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயம் உங்கள் பார்வைக்குக் கள்ளர்குகையாயிற்றோ? இதோ, நானும் இதைக் கண்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
நான் முந்தி என் நாமம் விளங்கப்பண்ணின சீலோவிலுள்ள என் ஸ்தலத்துக்கு நீங்கள் போய், இஸ்ரவேல் ஜனத்தினுடைய பொல்லாப்பினிமித்தம் நான் அதற்குச் செய்ததைப் பாருங்கள்.
நீங்கள் இந்தக் கிரியைகளையெல்லாம் செய்தீர்கள், நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிவந்திருந்தும், நீங்கள் கேளாமலும், நான் உங்களைக் கூப்பிட்டும், நீங்கள் உத்தரவுகொடாமலும் போனபடியினால்,
என் நாமம் தரிக்கப்பட்டதும், நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறதுமான இந்த ஆலயத்துக்கும் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த ஸ்தலத்துக்கும், நான் சீலோவுக்குச் செய்ததுபோலச் செய்வேன்.
அவர்கள் எனக்கா மனமடிவுண்டாக்குகிறார்கள்? தங்கள் முகங்கள் வெட்கத்துக்குட்படும்படி அவர்கள் தங்களுக்கே அல்லவோ மனமடிவுண்டாக்குகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஆதலால், இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது அது அப்புறம் தோப்பேத் என்றும், இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கென்றும் சொல்லப்படாமல், சங்காரப்பள்ளத்தாக்கென்று சொல்லப்படும்; தோப்பேத்திலே இடங்கிடையாமற்போகுமட்டும் சவங்களை அடக்கம்பண்ணுவார்கள்.
For | כִּֽי | kî | kee |
have done | עָשׂ֨וּ | ʿāśû | ah-SOO |
the children | בְנֵי | bĕnê | veh-NAY |
of Judah | יְהוּדָ֥ה | yĕhûdâ | yeh-hoo-DA |
evil | הָרַ֛ע | hāraʿ | ha-RA |
in my sight, | בְּעֵינַ֖י | bĕʿênay | beh-ay-NAI |
saith | נְאֻם | nĕʾum | neh-OOM |
the Lord: | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
set have they | שָׂ֣מוּ | śāmû | SA-moo |
their abominations | שִׁקּֽוּצֵיהֶ֗ם | šiqqûṣêhem | shee-koo-tsay-HEM |
in the house | בַּבַּ֛יִת | babbayit | ba-BA-yeet |
which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
called is | נִקְרָא | niqrāʾ | neek-RA |
my | שְׁמִ֥י | šĕmî | sheh-MEE |
name, by | עָלָ֖יו | ʿālāyw | ah-LAV |
to pollute | לְטַמְּאֽוֹ׃ | lĕṭammĕʾô | leh-ta-meh-OH |