அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: மனுபுத்திரனே கர்த்தருடைய ஆலயத்தின் சகல நியமங்களையும் அதின் சகல சட்டங்களையுங்குறித்து நான் உன்னோடே சொல்வதையெல்லாம் நீ உன் மனதிலே கவனித்து, உன் கண்களினாலே பார்த்து உன் காதுகளினாலே கேட்டு, பரிசுத்த ஸ்தலத்தினுடைய எல்லா வாசற்படிகளின் வழியாய் ஆலயத்துக்குள் பிரவேசிப்பதும் அதிலிருந்து புறப்படுவதும் இன்னவிதமென்று நீ ஆலோசித்துப் பார்த்து,
அவர்கள் இவர்களுடைய நரகலான விக்கிரகங்களுக்கு முன்பாக நின்று இவர்களுக்கு ஊழியஞ்செய்து, இஸ்ரவேல் வம்சத்தார் அக்கிரமத்தில் விழப்பண்ணினபடியினால், நான் என் கையை அவர்களுக்கு விரோதமாய் உயர்த்தினேன், அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
இஸ்ரவேல் புத்திரரே, என்னைவிட்டு வழிதப்பிப்போகையில், என் பரிசுத்த ஸ்தலத்தின் காவலைக் காக்கிற சாதோக்கின் புத்திரராகிய லேவியர் என்னும் ஆசாரியர்களே எனக்கு ஆராதனைசெய்ய என் சமீபத்தில் சேர்ந்து, நிணத்தையும் இரத்தத்தையும் எனக்குச் செலுத்த என் சந்நிதியில் நிற்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
விதவையையும் தள்ளிவிடப்பட்டவளையும் அவர்கள் விவாகம்பண்ணாமல், இஸ்ரவேல் வம்சத்தாளாகிய கன்னிகையையாகிலும் ஒரு ஆசாரியனின் மனைவியாயிருந்த விதவையையாகிலும் விவாகம்பண்ணலாம்.
தகப்பன், தாய், குமாரன், குமாரத்தி, சகோதரன் புருஷனுக்கு வாழ்க்கைப்படாத சகோதரி என்னும் இவர்களுடைய சவத்தினால் அவர்கள் தீட்டுப்படலாமேயல்லாமல், அவர்களிலொருவனும் செத்த ஒருவனிடத்தில்போய்த் தீட்டுப்படலாகாது.
And | כִּ֣י | kî | kee |
אִם | ʾim | eem | |
the Levites | הַלְוִיִּ֗ם | halwiyyim | hahl-vee-YEEM |
that | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
far away gone are | רָֽחֲקוּ֙ | rāḥăqû | ra-huh-KOO |
from | מֵֽעָלַ֔י | mēʿālay | may-ah-LAI |
went astray, me, | בִּתְע֤וֹת | bitʿôt | beet-OTE |
when Israel | יִשְׂרָאֵל֙ | yiśrāʾēl | yees-ra-ALE |
which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
went astray away | תָּע֣וּ | tāʿû | ta-OO |
from | מֵֽעָלַ֔י | mēʿālay | may-ah-LAI |
me after | אַחֲרֵ֖י | ʾaḥărê | ah-huh-RAY |
idols; their | גִּלּֽוּלֵיהֶ֑ם | gillûlêhem | ɡee-loo-lay-HEM |
they shall even bear | וְנָשְׂא֖וּ | wĕnośʾû | veh-nose-OO |
their iniquity. | עֲוֹנָֽם׃ | ʿăwōnām | uh-oh-NAHM |