ஆகையால், நீ அவர்களோடே பேசிச்சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாரில் தன்னுடைய நரகலான விக்கிரகங்களைத் தன் இருதயத்தின்மேல் நாட்டி, தன் அக்கிரமமாகிய இடறலைத் தன் முகத்துக்கு எதிராக வைத்துக்கொண்டிருக்கிற எவனாகிலும் தீர்க்கதரிசியினிடத்தில் வந்தால், கர்த்தராகிய நான் இஸ்ரவேல் வம்சத்தாருடைய இருதயத்தில் இருக்கிறதைப் பிடிக்கும்படியாக அப்படிப்பட்டவனுடைய நரகலான விக்கிரகங்களின் திரட்சிக்குத்தக்கதாக உத்தரவு கொடுப்பேன்.
ஆகையால், நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: திரும்புங்கள், உங்கள் நரகலான விக்கிரகங்களை விட்டுத் திரும்புங்கள்; உங்கள் சகல அருவருப்புகளையும் விட்டு உங்கள் முகங்களைத் திருப்புங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
அப்பொழுது நோவா, தானியேல், யோபு ஆகிய இம்மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
அந்த மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும் தாங்கள்மாத்திரம் தப்புவார்களேயல்லாமல், குமாரரையாகிலும் குமாரத்திகளையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள்; தேசமும் பாழாய்ப்போகும் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
நோவாவும் தானியேலும் யோபும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களை மாத்திரம் தப்புவிப்பார்களேயல்லாமல், குமாரரையாகிலும் குமாரத்திகளையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள்; தேசமும் பாழாய்ப்போகும் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
ஆகையால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்; நான் மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்படி எருசலேமுக்கு விரோதமாகப் பட்டயம், பஞ்சம், துஷ்டமிருகங்கள், கொள்ளைநோய் என்னும் இந்நான்கு கொடிய தண்டனைகளையும் அனுப்பும்போது எவ்வளவு அதிக சங்காரமாகும்?
Though were | שְׁלֹ֨שֶׁת | šĕlōšet | sheh-LOH-shet |
as | הָאֲנָשִׁ֣ים | hāʾănāšîm | ha-uh-na-SHEEM |
three | הָאֵלֶּה֮ | hāʾēlleh | ha-ay-LEH |
men these in | בְּתוֹכָהּ֒ | bĕtôkāh | beh-toh-HA |
it, live, | חַי | ḥay | hai |
I | אָ֗נִי | ʾānî | AH-nee |
saith | נְאֻם֙ | nĕʾum | neh-OOM |
the Lord | אֲדֹנָ֣י | ʾădōnāy | uh-doh-NAI |
God, | יְהוִ֔ה | yĕhwi | yeh-VEE |
neither | אִם | ʾim | eem |
sons nor | בָּנִ֥ים | bānîm | ba-NEEM |
daughters; | וְאִם | wĕʾim | veh-EEM |
deliver | בָּנ֖וֹת | bānôt | ba-NOTE |
shall | יַצִּ֑ילוּ | yaṣṣîlû | ya-TSEE-loo |
they | הֵ֤מָּה | hēmmâ | HAY-ma |
they only | לְבַדָּם֙ | lĕbaddām | leh-va-DAHM |
delivered, be shall | יִנָּצֵ֔לוּ | yinnāṣēlû | yee-na-TSAY-loo |
but the land | וְהָאָ֖רֶץ | wĕhāʾāreṣ | veh-ha-AH-rets |
shall be | תִּהְיֶ֥ה | tihye | tee-YEH |
desolate. | שְׁמָמָֽה׃ | šĕmāmâ | sheh-ma-MA |