இதற்குப் பின்பு நான் சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கொடுமைகளையெல்லாம் சிந்தித்துப்பார்த்தேன்; இதோ ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுவாரில்லை; ஒடுக்குகிறவர்கள் பட்சத்தில் பெலமிருந்தது, அப்படியிருந்தும் தேற்றுவாரில்லை.
ஆதலால் இன்னும் உயிரோடிருந்து பிழைக்கிறவர்களைப்பார்க்கிலும் முன்னமே காலஞ்சென்று செத்தவனையே பாக்கியவான்கள் என்றேன்.
இவ்விரு திறத்தாருடைய நிலைமையைப்பார்க்கிலும் இன்னும் பிறவாதவனுடைய நிலைமையே வாசி; அவன் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் துர்ச்செய்கைகளைக் காணவில்லையே.
மூடன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு, தன் சதையையே தின்கிறான்.
வருத்தத்தோடும் மனச்சஞ்சலத்தோடும் இரண்டு கைப்பிடியும் நிறையக்கொண்டிருப்பதைப்பார்க்கிலும், அமைச்சலோடு ஒருகைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே நலம்.
பின்பு நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே செய்யப்படும் மாயையான வேறொரு காரியத்தைக் கண்டேன்.
ஒருவன் ஒண்டிக்காரனாயிருக்கிறான்; அவனுக்கு உடனாளியுமில்லை, அவனுக்குப் பிள்ளையும் சகோதரனுமில்லை; அப்படியிருந்தும் அவன்படும் பிரயாசத்துக்கு முடிவில்லை; அவன் கண் ஐசுவரியத்தால் திருப்தியாகிறதுமில்லை; நான் ஒரு நன்மையையும் அநுபவியாமல் யாருக்காகப் பிரயாசப்படுகிறேன் என்று அவன் சிந்திக்கிறதுமில்லை; இதுவும் மாயை தீராத தொல்லை.
ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே.
அரசாளச் சிறைச்சாலையிலிருந்து புறப்படுவாருமுண்டு; ராஜாங்கத்தில் பிறந்து ஏழையாவாருமுண்டு.
சூரியனுக்குக்கீழே ஜீவனுள்ளோர் யாவரும் ராஜாவின் பட்டத்திற்கு வரப்போகிற பிள்ளையின் பட்சத்தில் சார்ந்திருப்பதைக் கண்டேன்.
அவர்களுக்குமுன் அப்படிச் செய்த ஜனங்களின் இலக்கத்திற்கு முடிவில்லை; இனி இருப்பவர்கள் இவன்மேலும் பிரியம் வைக்காமற்போவார்கள்; இதுவும் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.
is considered | וְרָאִ֨יתִֽי | wĕrāʾîtî | veh-ra-EE-tee |
Again, | אֲנִ֜י | ʾănî | uh-NEE |
I | אֶת | ʾet | et |
כָּל | kāl | kahl | |
all | עָמָ֗ל | ʿāmāl | ah-MAHL |
travail, and | וְאֵת֙ | wĕʾēt | veh-ATE |
every | כָּל | kāl | kahl |
right | כִּשְׁר֣וֹן | kišrôn | keesh-RONE |
work, | הַֽמַּעֲשֶׂ֔ה | hammaʿăśe | ha-ma-uh-SEH |
that for | כִּ֛י | kî | kee |
this envied | הִ֥יא | hîʾ | hee |
is man | קִנְאַת | qinʾat | keen-AT |
a of his | אִ֖ישׁ | ʾîš | eesh |
neighbour. | מֵרֵעֵ֑הוּ | mērēʿēhû | may-ray-A-hoo |
also This | גַּם | gam | ɡahm |
vanity | זֶ֥ה | ze | zeh |
and vexation | הֶ֖בֶל | hebel | HEH-vel |
of spirit. | וּרְע֥וּת | ûrĕʿût | oo-reh-OOT |
רֽוּחַ׃ | rûaḥ | ROO-ak |