சங்கீதம் 119:107
நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்.
I am afflicted very much: restore life in me, O LORD, according unto your word.
சங்கீதம் 107:20
அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.
He sent his word, and healed them, and delivered them from their destructions.
சங்கீதம் 119:9
வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்கிறதினால்தானே.
Wherewithal shall a young man cleanse his way? by taking heed thereto according to your word.
சங்கீதம் 119:165
உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.
Great peace have they which love your law: and nothing shall offend them.
ஆதியாகமம் 1:3
தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.
And God said, Let there be light: and there was light.
ஆதியாகமம் 1:7
தேவன் ஆகாய விரிவை உண்டு பண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று.
And God made the firmament, and divided the waters which were under the firmament from the waters which were above the firmament: and it was so.
சங்கீதம் 119:28
சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்துபோகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்.
My soul melts for heaviness: strengthen you me according unto your word.
சங்கீதம் 119:105
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
Your word is a lamp unto my feet, and a light unto my path.

