🏠  Lyrics  Chords  Bible 

போவாஸ் போவாஸ் in G♯ Scale

போவாஸ் போவாஸ்
போர்வையால் என்னை மூடுமையா
இயேசையா இயேசையா (உம்)
அன்பினால் என்னை மூடுமையா
உந்தன் அடிமை நான் ஐயா என்னைக்
காப்பாற்றும் கடமை உமக்கையா
…போவாஸ்
நிறைவான பரிசு நீர் தானையா உம்
நிழல்தானே தங்கும் சொர்க்கமையா
…போவாஸ்
வேதனையோ வேறு சோதனையோ
எதுவுமே என்னை பிரிக்காதையா
…போவாஸ்
ஓய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன்
வேறொரு வயல் நான் போவதில்லை
…போவாஸ்
கற்றுத் தாரும் நான் கடைபிடிப்பேன்
சொல்வதை செய்து முடித்திடுவேன்
…போவாஸ்
போர்வை விரித்தேன் போடுமையா
கோதுமையால் என்னை நிரப்புமையா
கருணைக் கண் கொண்டு
நோக்குமையா உந்தன்
கனிமொழியால் என்னைத் தேற்றுமையா
…போவாஸ்
திருப்தியாக்கும் என் திருஉணவே
தாகம் தீர்க்கும் ஜீவத் தண்ணீரே
…போவாஸ்


போவாஸ் போவாஸ் for Keyboard, Guitar and Piano

Povaas Povaas Chords in G♯ Scale

English