🏠  Lyrics  Chords  Bible 

பாதகன் என் வினைதீர் ஐயா கிருபாகரா நின் in C♯ Scale

பாதகன் என் வினைதீர் ஐயா கிருபாகரா
நின் பாடு நினைந்தென்னைச் சேர் ஐயா
தீதகற்றவே சிறந்த சேன் உலகினிமை விட்டு
பூதல துகந்துவந்த புண்ணியனே யேசு தேவா
வந்தறும் எப்பாவிகளையும்
அங்கீகரிக்கும் மாசில்லாத இயேசு நாதனே
உந்தன் இடம் வந்துளமே உருகி
அழுத மாது முந்தி மிகச் செய்த பாவம்
முழுதும் பொறுத்தாய் அன்றோ
சிந்தின உன் உதிரம் அதே தீயோன்
மறத்தை சின்னபின்னம் செய்ய வல்லதே
பந்தம் உற உந்தன் வலப் பாகா முற்ற
கள்வனையே விந்தையுறவே
இரட்சித்த வேதனே அவ்விதமாயே
அற்ப விசுவாசமுளன் ஆம் – அடியேனை
இனி ஆதரிப்பதார் உன் தஞ்சமே
தற்பரே உனைத் தரிசித் தன்றி நம்பிடேன்
எனவே செப்பின தோமாவுக்குப்போல்
திரு உருக்காட்சி தந்து


பாதகன் என் வினைதீர் ஐயா கிருபாகரா நின் for Keyboard, Guitar and Piano

Paathakan En Vinaitheer Chords in C♯ Scale

English