நாளைய தினத்தைக் குறித்து
பயமில்லை – நாதன் இயேசு
எல்லாம் பார்த்துக் கொள்வார்
எல்லாம் பார்த்துக் கொள்வார்Em
ஆண்டவர் எனது வெளிச்சமும்
மீட்புமானார்
எதற்கும் பயப்படேன்
அவரே எனது வாழ்வின் பெலனானார்
யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா
கேடுவரும் நாளில் கூடார மறைவினிலே
ஒளித்து வைத்திடுவார்
கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார்
கலக்கம் எனக்கில்லை – அல்லேலூயா
தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்
கர்த்தர் சேர்த்துக் கொள்வார்
கர்த்தருக்காய் தினமும் காத்திருப்பேன்
புதுபெலன் பெற்றிடுவேன் – அல்லேலூயா
சிங்கக்குட்டிகள் பட்டினி கிடந்தாலும்
எனக்கோ குறைவில்லை – குறைகளை
எல்லாம் நிறைவாக்கித் தந்திடுவார்
கொஞ்சமும் பயமில்லை – அல்லேலூயா
Naalaiya Thinaththaik Kuriththu Chords for Keyboard, Guitar and Piano