கர்த்தர் செய்ய நினைத்தது
ஒன்றும் தடைப்படாது-2.
தடைகளை நீக்குவார்
ஜெயத்தை தந்திடுவார்-2
ஜெயமாய் நடத்துவார் -உன்னை(2)
ஹாலேலூயா… ஹாலேலூயா – 4
இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே நம்
கர்த்தருக்குப் பிரியமானதே
ஆபிரகாமை ஆசீர்வதித்தவர்
உன்னையும் இன்று ஆசீர்வதிப்பார்-2
சூழ்நிலைகளைப் பார்த்து
நீ சோர்ந்து போகாதே
கர்த்தர் உன்னை உயர்த்திடுவார்-2
ஹாலேலூயா... ஹாலேலூயா
வழியே இல்லா இடங்களிலும் புது
வழியை உனக்கு உண்டாக்குவார்
இருண்டு போன உந்தன் வாழ்க்கையில்
ஜீவ ஒளியை இன்று ஏற்றிடுவார்
வாசல்கள் எல்லாம்
அடைக்கப்பட்டாலும் புது
வாசல் உனக்கு திறந்திடுவார்
ஹாலேலூயா... ஹாலேலூயா
Karththar Seyya Ninaiththathu Chords for Keyboard, Guitar and Piano