நான் இரவும் பகலும் இடைவிடாமல் என் ஜெபங்களில் உன்னை நினைத்து, உன் கண்ணீரை ஞாபகம்பண்ணி, சந்தோஷத்தால் நிறையப்படும்படிக்கு உன்னைக் காண வாஞ்சையாயிருந்து,
உன்னிலுள்ள மாயமற்ற விசுவாசத்தை நினைவுகூருகிறதினால், என் முன்னோர்கள் முதற்கொண்டு சுத்த மனச்சாட்சியோடே ஆராதித்துவரும் தேவனை நான் ஸ்தோத்திரிக்கிறேன்.
இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கைளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பிவிடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன்.
தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.
நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்தக்கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்.
அதினிமித்தம் நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆயினும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்.
உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள்.
அவன் ரோமாவில் வந்திருந்தபோது அதிக ஜாக்கிரதையாய் என்னைத்தேடிக் கண்டுபிடித்தான்.
it was And | וְלִמְשֹׁל֙ | wĕlimšōl | veh-leem-SHOLE |
to rule over | בַּיּ֣וֹם | bayyôm | BA-yome |
the day night, the | וּבַלַּ֔יְלָה | ûballaylâ | oo-va-LA-la |
and over and | וּֽלֲהַבְדִּ֔יל | ûlăhabdîl | oo-luh-hahv-DEEL |
to | בֵּ֥ין | bên | bane |
divide | הָא֖וֹר | hāʾôr | ha-ORE |
light | וּבֵ֣ין | ûbên | oo-VANE |
the from | הַחֹ֑שֶׁךְ | haḥōšek | ha-HOH-shek |
the darkness: | וַיַּ֥רְא | wayyar | va-YAHR |
saw | אֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
God | כִּי | kî | kee |
and that good. | טֽוֹב׃ | ṭôb | tove |