லேவியராகமம் 19:5
நீங்கள் சமாதானபலியைக் கர்த்தருக்குச் செலுத்தினால், அதை மனோற்சாகமாய்ச் செலுத்துங்கள்.
Tamil Indian Revised Version
நீங்கள் சமாதானபலியைக் கர்த்தருக்குச் செலுத்தினால், அதை மன உற்சாகமாகச் செலுத்துங்கள்.
Tamil Easy Reading Version
“நீங்கள் சமாதானப் பலியைக் கர்த்தருக்குக் கொடுக்கும்போது அது அங்கீகரிக்கப்படத்தக்க சரியான வழியிலேயே செய்யவேண்டும்.
திருவிவிலியம்
ஆண்டவருக்கு நல்லுறவுப்பலி செலுத்தினால் அதை மனமுவந்து செய்யுங்கள்.
King James Version (KJV)
And if ye offer a sacrifice of peace offerings unto the LORD, ye shall offer it at your own will.
American Standard Version (ASV)
And when ye offer a sacrifice of peace-offerings unto Jehovah, ye shall offer it that ye may be accepted.
Bible in Basic English (BBE)
And when you give a peace offering to the Lord, do it in the way which is pleasing to the Lord.
Darby English Bible (DBY)
And if ye sacrifice a sacrifice of peace-offering to Jehovah, ye shall sacrifice it for your acceptance.
Webster’s Bible (WBT)
And if ye offer a sacrifice of peace-offerings to the LORD, ye shall offer it at your own will.
World English Bible (WEB)
“‘When you offer a sacrifice of peace offerings to Yahweh, you shall offer it so that you may be accepted.
Young’s Literal Translation (YLT)
`And when ye sacrifice a sacrifice of peace-offerings to Jehovah, at your pleasure ye do sacrifice it;
லேவியராகமம் Leviticus 19:5
நீங்கள் சமாதானபலியைக் கர்த்தருக்குச் செலுத்தினால், அதை மனோற்சாகமாய்ச் செலுத்துங்கள்.
And if ye offer a sacrifice of peace offerings unto the LORD, ye shall offer it at your own will.
| וְכִ֧י | wĕkî | veh-HEE | |
| תִזְבְּח֛וּ | tizbĕḥû | teez-beh-HOO | |
| זֶ֥בַח | zebaḥ | ZEH-vahk | |
| שְׁלָמִ֖ים | šĕlāmîm | sheh-la-MEEM | |
| לַֽיהוָ֑ה | layhwâ | lai-VA | |
| לִֽרְצֹנְכֶ֖ם | lirĕṣōnĕkem | lee-reh-tsoh-neh-HEM | |
| תִּזְבָּחֻֽהוּ׃ | tizbāḥuhû | teez-ba-hoo-HOO |
இணை வசனம்
Leviticus 22:19
அவர்கள் தங்கள் மனதின்படியே மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் வெள்ளாடுகளிலாகிலும் பழுதற்ற ஒரு ஆணைப் பிடித்துவந்து செலுத்துவார்களாக.
Leviticus 7:16
அவன் செலுத்தும் பலி பொருத்தனையாவது உற்சாகபலியாயாவது இருக்குமானால், அது செலுத்தப்படும் நாளிலும், அதில் மீதியாயிருக்கிறது மறுநாளிலும் புசிக்கப்படலாம்.
Leviticus 1:3
அவன் செலுத்துவது மாட்டுமந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்கதகன பலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; கர்த்தருடைய சந்நிதியில் தான் அங்கிகரிக்கப்படும்படி, அவன் அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் கொண்டுவந்து,
Ephesians 2:13
முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.
Ezekiel 46:12
அதிபதி உற்சாகமான தகனபலியாகிலும், சமாதான பலிகளையாகிலும் கர்த்தருக்கு உற்சாகமாய்ச் செலுத்தவேண்டுமென்றால், அவனுக்குக் கிழக்கு நோக்கிய எதிரான வாசல் திறக்கப்படுவதாக; அப்பொழுது அவன் ஓய்வுநாளில் செய்கிறதுபோல, தன் தகனபலியையும் தன் சமாதானபலியையும் செலுத்தி, பின்பு புறப்படக்கடவன்; அவன் புறப்பட்டபின்பு வாசல் பூட்டப்படவேண்டும்.
Ezekiel 46:2
அப்பொழுது அதிபதி வெளிவாசல் மண்டபத்தின் வழியாய் பிரவேசித்து, வாசல் நிலையண்டையிலே நிற்கக்கடவன்; ஆசாரியர்களோ அவனுடைய தகனபலியையும், அவனுடைய சமாதான பலிகளையும் படைக்கக்கடவர்கள்; அவன் வாசற்படியிலே ஆராதனை செய்து, பின்பு புறப்படுவானாக; அந்த வாசல் சாயங்காலமட்டும் பூட்டப்படாதிருப்பதாக.
Ezekiel 45:15
இஸ்ரவேல் தேசத்திலே நல்லமேய்ச்சலை மேய்கிற மந்தையிலே இரு ஆடுகளில் ஒரு ஆடும், அவர்களுடைய பாவநிவாரணத்திற்காக போஜனபலியாகவும் தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்தப்படக்கடவதென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
2 Chronicles 31:2
எசேக்கியா ஆசாரியர் லேவியருடைய வகுப்புகளை அவர்கள் வரிசைகளின்படியேயும் அவரவரை அவர்கள் ஊழியத்தின்படியேயும் திட்டப்படுத்தி, ஆசாரியரையும் லேவியரையும், சர்வாங்கதகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தவும், கர்த்தருடைய பாளயத்தின் வாசல்களில் ஊழியஞ்செய்து துதித்து ஸ்தோத்திரிக்கவும் ஒழுங்குப்படுத்தினான்.
Leviticus 22:29
கர்த்தருக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்துவீர்களானால் மனப்பூர்வமாய் அதைச் செலுத்துவீர்களாக.
Leviticus 22:23
நீண்ட அல்லது குறுகின அவயவமுள்ள மாட்டையும் ஆட்டையும் நீ உற்சாகபலியாக இடலாம்; பொருத்தனைக்காக அது அங்கிகரிக்கப்படமாட்டாது.
Leviticus 22:21
ஒருவன் விசேஷித்த பொருத்தனையாவது, உற்சாகமாயாவது, கர்த்தருக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சமாதானபலிகளைச் செலுத்தப்போனால், அது அங்கிகரிக்கும்படி, ஒரு பழுதுமில்லாமல் உத்தமமாயிருக்கவேண்டும்.
Leviticus 3:1
ஒருவன் சமாதான பலியைப் படைக்கவேண்டுமென்று, மாட்டுமந்தையில் எடுத்துச் செலுத்துவானாகில், அது காளையானாலும் சரி, பசுவானாலும் சரி, பழுதற்றிருப்பதை கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தக்கடவன்.
Exodus 24:5
இஸ்ரவேல் புத்திரரின் வாலிபரை அனுப்பினான்; அவர்கள் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி, கர்த்தருக்குச் சமாதானபலிகளாகக் காளைகளைப் பலியிட்டார்கள்.
Tags நீங்கள் சமாதானபலியைக் கர்த்தருக்குச் செலுத்தினால் அதை மனோற்சாகமாய்ச் செலுத்துங்கள்
லேவியராகமம் 19:5 Concordance லேவியராகமம் 19:5 Interlinear லேவியராகமம் 19:5 Image