உபாகமம் 16:9
ஏழு வாரங்களை எண்ணுவாயாக; அறுப்பு அறுக்கத் தொடங்கும் காலமுதல் நீ அந்த ஏழு வாரங்களையும் எண்ணவேண்டும்.
Tamil Indian Revised Version
ஏழு வாரங்களை எண்ணுவாயாக; அறுப்பு அறுக்கத் துவங்கும் காலமுதல் நீ அந்த ஏழு வாரங்களையும் எண்ணவேண்டும்.
Tamil Easy Reading Version
“உங்களது அறுவடைக்காலம் துவங்குவதிலிருந்து ஏழு வாரங்களை எண்ணிக்கொள்ளுங்கள்.
திருவிவிலியம்
நீ ஏழு வாரங்களை எண்ணிக்கொள். விளைந்து நிற்கும் கதிரில் கதிரரிவாளை முதலில் வைத்தநாள் தொடங்கி ஏழு வாரங்களைக் கணக்கிடு.
Title
வாரங்களின் பண்டிகை (பெந்தெகோஸ்தே)
Other Title
அறுவடை விழா§(விப 34:22; லேவி 23:15-21)
King James Version (KJV)
Seven weeks shalt thou number unto thee: begin to number the seven weeks from such time as thou beginnest to put the sickle to the corn.
American Standard Version (ASV)
Seven weeks shalt thou number unto thee: from the time thou beginnest to put the sickle to the standing grain shalt thou begin to number seven weeks.
Bible in Basic English (BBE)
Let seven weeks be numbered from the first day when the grain is cut.
Darby English Bible (DBY)
Seven weeks shalt thou count: from the beginning of putting the sickle into the corn shalt thou begin to count seven weeks.
Webster’s Bible (WBT)
Seven weeks shalt thou number to thee: begin to number the seven weeks from the time when thou beginnest to put the sickle to the corn.
World English Bible (WEB)
Seven weeks shall you number to you: from the time you begin to put the sickle to the standing grain shall you begin to number seven weeks.
Young’s Literal Translation (YLT)
`Seven weeks thou dost number to thee; from the beginning of the sickle among the standing corn thou dost begin to number seven weeks,
உபாகமம் Deuteronomy 16:9
ஏழு வாரங்களை எண்ணுவாயாக; அறுப்பு அறுக்கத் தொடங்கும் காலமுதல் நீ அந்த ஏழு வாரங்களையும் எண்ணவேண்டும்.
Seven weeks shalt thou number unto thee: begin to number the seven weeks from such time as thou beginnest to put the sickle to the corn.
| שִׁבְעָ֥ה | šibʿâ | sheev-AH | |
| שָֽׁבֻעֹ֖ת | šābuʿōt | sha-voo-OTE | |
| תִּסְפָּר | tispār | tees-PAHR | |
| לָ֑ךְ | lāk | lahk | |
| מֵֽהָחֵ֤ל | mēhāḥēl | may-ha-HALE | |
| חֶרְמֵשׁ֙ | ḥermēš | her-MAYSH | |
| בַּקָּמָ֔ה | baqqāmâ | ba-ka-MA | |
| תָּחֵ֣ל | tāḥēl | ta-HALE | |
| לִסְפֹּ֔ר | lispōr | lees-PORE | |
| שִׁבְעָ֖ה | šibʿâ | sheev-AH | |
| שָֽׁבֻעֽוֹת׃ | šābuʿôt | SHA-voo-OTE |
இணை வசனம்
Exodus 34:22
கோதுமை அறுப்பின் முதற்பலனைச் செலுத்தும் ஏழு வாரங்களின் பண்டிகையையும், வருஷமுடிவிலே சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக.
Exodus 23:16
நீ வயலில் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையையும், வருஷ முடிவிலே நீ வயலில் உன் வேலைகளின் பலனைச் சேர்த்துத் தீர்ந்தபோது, சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக.
Acts 2:1
பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.
Hebrews 2:1
ஆகையால், நாம் கேட்டவைகளைவிட்டு விலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும்.
1 Corinthians 16:8
ஆனாலும் பெந்தெகொஸ்தே பண்டிகைவரைக்கும் எபேசு பட்டணத்தில் இருப்பேன்.
2 Chronicles 8:13
ஒவ்வொரு நாளின் கட்டளைக்குந்தக்கதாய் மோசேயுடைய கற்பனையின்படியே ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும், வருஷத்தில் மூன்றுதரம் ஆசரிக்கிற பண்டிகைகளாகிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான்.
Deuteronomy 16:16
வருஷத்தில் மூன்றுதரம் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள்.
Deuteronomy 16:10
அவைகள் முடிந்தபோது வாரங்களின் பண்டிகையை உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று ஆசரித்து, உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததற்குத் தக்கதாய் உன் கைக்கு நேர்ந்த மனப்பூர்வமான காணிக்கையாகிய பகுதியைச் செலுத்தி,
Numbers 28:26
அந்த வாரங்களுக்குப்பின் நீங்கள் கர்த்தருக்குப் புதிய போஜனபலியாக முதற்கனிகளைச் செலுத்தும் பண்டிகை நாளிலும் பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.
Leviticus 23:15
நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவங்கி, ஏழுவாரங்கள் நிறைவேறினபின்பு,
Tags ஏழு வாரங்களை எண்ணுவாயாக அறுப்பு அறுக்கத் தொடங்கும் காலமுதல் நீ அந்த ஏழு வாரங்களையும் எண்ணவேண்டும்
உபாகமம் 16:9 Concordance உபாகமம் 16:9 Interlinear உபாகமம் 16:9 Image