Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 28:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 28 அப்போஸ்தலர் 28:26

அப்போஸ்தலர் 28:26
நீங்கள் காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், கண்ணாரக்கண்டும் பாராதிருப்பீர்கள்

Tamil Indian Revised Version
நீங்கள் காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், கண்ணாரக்கண்டும் பார்க்காதிருப்பீர்கள்.

Tamil Easy Reading Version
“‘இம்மக்களிடம் போய் அவர்களுக்குக் கூறு, நீங்கள் கவனிப்பீர்கள், நீங்கள் கேட்பீர்கள், ஆனால் புரிந்துகொள்ளமாட்டீர்கள். நீங்கள் காண்பீர்கள், நீங்கள் பார்ப்பீர்கள், ஆனால் நீங்கள் பார்ப்பவற்றைப் புரிந்துகொள்ளமாட்டீர்கள்.

திருவிவிலியம்
❮26-27❯⁽“நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து␢ கேட்டும் கருத்தில் கொள்வதில்லை.␢ உங்கள் கண்களால்␢ பார்த்துக் கொண்டேயிருந்தும்␢ உணர்வதில்லை.␢ இம்மக்களின் இதயம்␢ கொழுத்துப் போய்விட்டது.␢ காதுகள் மந்தமாகிவிட்டன.␢ இவர்கள் தம் கண்களை␢ மூடிக் கொண்டார்கள்;␢ எனவே, கண்ணால் காணாமலும்␢ காதால் கேளாமலும்␢ உள்ளத்தால் உணராமலும் § மனம் மாறாமலும் இருக்கின்றனர்.␢ நானும் அவர்களைக்␢ குணமாக்காமல் இருக்கிறேன் என␢ நீ இம்மக்களிடம் போய்ச் சொல்.”⁾⒫

Acts 28:25Acts 28Acts 28:27

King James Version (KJV)
Saying, Go unto this people, and say, Hearing ye shall hear, and shall not understand; and seeing ye shall see, and not perceive:

American Standard Version (ASV)
saying, Go thou unto this people, and say, By hearing ye shall hear, and shall in no wise understand; And seeing ye shall see, and shall in no wise perceive:

Bible in Basic English (BBE)
Go to this people and say, Though you give ear, you will not get knowledge; and seeing, you will see, but the sense will not be clear to you:

Darby English Bible (DBY)
saying, Go to this people, and say, Hearing ye shall hear and not understand, and seeing ye shall see and not perceive.

World English Bible (WEB)
saying, ‘Go to this people, and say, In hearing, you will hear, But will in no way understand. In seeing, you will see, But will in no way perceive.

Young’s Literal Translation (YLT)
saying, Go on unto this people and say, With hearing ye shall hear, and ye shall not understand, and seeing ye shall see, and ye shall not perceive,

அப்போஸ்தலர் Acts 28:26
நீங்கள் காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், கண்ணாரக்கண்டும் பாராதிருப்பீர்கள்
Saying, Go unto this people, and say, Hearing ye shall hear, and shall not understand; and seeing ye shall see, and not perceive:

λέγονlegonLAY-gone
Πορεύθητιporeuthētipoh-RAYF-thay-tee
πρὸςprosprose
τὸνtontone
λαὸνlaonla-ONE
τοῦτονtoutonTOO-tone
καὶkaikay
εἰπὲ,eipeee-PAY
Ἀκοῇakoēah-koh-A
ἀκούσετεakouseteah-KOO-say-tay
καὶkaikay
οὐouoo
μὴmay
συνῆτεsynētesyoon-A-tay
καὶkaikay
βλέποντεςblepontesVLAY-pone-tase
βλέψετεblepseteVLAY-psay-tay
καὶkaikay
οὐouoo
μὴmay
ἴδητε·idēteEE-thay-tay

இணை வசனம்

Isaiah 6:9
அப்பொழுது அவர்: நீ போய், இந்த ஜனங்களை நோக்கி: நீங்கள் காதாரக் கேட்டும் உணராமலும், கண்ணாரக்கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல்.

Ezekiel 12:2
மனுபுத்திரனே, நீ கலகவீட்டாரின் நடுவிலே தங்கியிருக்கிறாய்; காணும்படிக்கு அவர்களுக்குக் கண்கள் இருந்தாலும் காணாமற்போகிறார்கள்; கேட்கும்படிக்கு அவர்களுக்குக் காதுகள் இருந்தாலும் கேளாமற்போகிறார்கள்; அவர்கள் கலகவீட்டார்.

Isaiah 42:19
என் தாசனையல்லாமால் குருடன் யார்? நான் அனுப்பிய தூதனையல்லாமல் செவிடன் யார்? உத்தமனையல்லாமல் குருடன் யார்? கர்த்தருடைய ஊழியக்காரனையல்லாமல் அந்தகன் யார்?

Matthew 13:14
ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்.

Luke 8:10
அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக, அவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.

Mark 4:12
அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்.

Deuteronomy 29:4
ஆகிலும் கர்த்தர் உங்களுக்கு உணரத்தக்க இருதயத்தையும், காணத்தக்க கண்களையும், கேட்கத்தக்க காதுகளையும் இந்நாள்வரைக்கும் கொடுக்கவில்லை.

2 Corinthians 4:4
தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.

Romans 11:8
கனநித்திரையின் ஆவியையும், காணாதிருக்கிற கண்களையும், கேளாதிருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.

John 12:38
கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படி இப்படி நடந்தது.

Luke 24:45
அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களை நோக்கி:

Luke 24:25
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே,

Mark 8:17
இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: உங்களிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியினால் நீங்கள் யோசனைபண்ணுகிறதென்ன? இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா?

Ezekiel 3:6
விளங்காத பேச்சும், தாங்கள் சொல்லும் வார்த்தைகளை நீ அறியாத கடினமான பாஷையுமுள்ள அநேகமான ஜனங்களிடத்திற்கு நீ அனுப்பப்படவில்லை; நான் அவர்களிடத்திற்கு உன்னை அனுப்பினாலும், அவர்கள் உனக்குச் செவிகொடுப்பார்களோ?

Jeremiah 5:21
கண்கள் இருந்தும் காணாமலும், காதுகள் இருந்தும் கேளாமலுமிருக்கிற அறிவில்லாத ஜனங்களே, கேளுங்கள்.

Isaiah 66:4
நான் கூப்பிட்டும் மறுஉத்தரவுகொடுக்கிறவனில்லாமலும், நான் பேசியும் அவர்கள் கேளாமலும், அவர்கள் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, நான் விரும்பாததைத் தெரிந்துகொண்டதினிமித்தம், நானும் அவர்களுடைய ஆபத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களுடைய திகில்களை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்.

Isaiah 29:14
ஆதலால் இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்; அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறந்துபோகும் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.

Isaiah 29:10
கர்த்தர் உங்கள்மேல் கனநித்திரையின் ஆவியை வரப்பண்ணி, உங்கள் கண்களை அடைத்து, ஞானதிருஷ்டிக்காரராகிய உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும் தலைவர்களுக்கும் முக்காடுபோட்டார்.

Psalm 81:11
என் ஜனமோ என் சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை, இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை.


Tags நீங்கள் காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள் கண்ணாரக்கண்டும் பாராதிருப்பீர்கள்
அப்போஸ்தலர் 28:26 Concordance அப்போஸ்தலர் 28:26 Interlinear அப்போஸ்தலர் 28:26 Image