Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

செப்பனியா 1:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் செப்பனியா செப்பனியா 1 செப்பனியா 1:5

செப்பனியா 1:5
வீடுகளின்மேல் வானசேனையைப் பணிகிறவர்களையும், கர்த்தர்பேரில் ஆணையிட்டு, மல்காமின்பேரிலும் ஆணையிட்டுப் பணிகிறவர்களையும்,

Tamil Indian Revised Version
வீடுகளின்மேல் வானசேனையை வணங்குகிறவர்களையும், கர்த்தரின் பெயரில் ஆணையிட்டு, மல்காமின்பெயரிலும் ஆணையிட்டு வணங்குகிறவர்களையும்,

Tamil Easy Reading Version
நான் நட்சத்திரங்களை வழிபடச் செல்ல கூரையின் மேல் செல்லும் ஜனங்களை அகற்றுவேன். ஜனங்கள் அப்பொய் ஆசாரியர்களை மறப்பார்கள். சில ஜனங்கள் என்னை ஆராதிப்பதாகச் சொல்கிறார்கள். அந்த ஜனங்கள் என்னை வழிபடுவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் இப்பொழுது அவர்கள் பொய்த் தெய்வமான மல்காமை வழிபடுகின்றனர். எனவே, நான் அந்த ஜனங்களை அந்த இடத்திலிருந்து நீக்குவேன்.

திருவிவிலியம்
⁽வீட்டின் மேல்தளத்திலிருந்து␢ வான் படைகளை வணங்குவோரையும்,␢ ஆண்டவரை வணங்கி␢ அவர் பெயராலும்␢ மில்க்கோம் தெய்வத்தின் பெயராலும்␢ ஆணையிடுவோரையும்␢ ஒழித்து விடுவேன்.⁾

Zephaniah 1:4Zephaniah 1Zephaniah 1:6

King James Version (KJV)
And them that worship the host of heaven upon the housetops; and them that worship and that swear by the LORD, and that swear by Malcham;

American Standard Version (ASV)
and them that worship the host of heaven upon the housetops; and them that worship, that swear to Jehovah and swear by Malcam;

Bible in Basic English (BBE)
And the worshippers of the army of heaven on the house-tops, and the Lord’s worshippers who take oaths by Milcom,

Darby English Bible (DBY)
and them that bow down to the host of the heavens upon the housetops; and them that bow down to Jehovah, that swear by [him], and swear by Malcham;

World English Bible (WEB)
those who worship the host of the sky on the housetops, those who worship and swear by Yahweh and also swear by Malcam,

Young’s Literal Translation (YLT)
And those bowing themselves On the roofs to the host of the heavens, And those bowing themselves, Swearing to Jehovah, and swearing by Malcham,

செப்பனியா Zephaniah 1:5
வீடுகளின்மேல் வானசேனையைப் பணிகிறவர்களையும், கர்த்தர்பேரில் ஆணையிட்டு, மல்காமின்பேரிலும் ஆணையிட்டுப் பணிகிறவர்களையும்,
And them that worship the host of heaven upon the housetops; and them that worship and that swear by the LORD, and that swear by Malcham;

וְאֶתwĕʾetveh-ET
הַמִּשְׁתַּחֲוִ֥יםhammištaḥăwîmha-meesh-ta-huh-VEEM
עַלʿalal
הַגַּגּ֖וֹתhaggaggôtha-ɡA-ɡote
לִצְבָ֣אliṣbāʾleets-VA
הַשָּׁמָ֑יִםhaššāmāyimha-sha-MA-yeem
וְאֶתwĕʾetveh-ET
הַמִּֽשְׁתַּחֲוִים֙hammišĕttaḥăwîmha-mee-sheh-ta-huh-VEEM
הַנִּשְׁבָּעִ֣יםhannišbāʿîmha-neesh-ba-EEM
לַֽיהוָ֔הlayhwâlai-VA
וְהַנִּשְׁבָּעִ֖יםwĕhannišbāʿîmveh-ha-neesh-ba-EEM
בְּמַלְכָּֽם׃bĕmalkāmbeh-mahl-KAHM

இணை வசனம்

Jeremiah 19:13
எந்த வீடுகளின்மேல் வானத்தின் சகல சேனைக்கும் தூபங்காட்டி அந்நியதேவர்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளாகிய எருசலேமின் வீடுகளும் யூதாவுடைய ராஜாவின் வீடுகளும் தோப்பேத் என்கிற ஸ்தலத்தைப்போல் தீட்டுப்பட்டவைகளாய் இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

1 Kings 11:33
அவர்கள் என்னைவிட்டு, சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும், மோவாபியரின் தேவனாகிய காமோசையும், அம்மோன் புத்திரரின் தேவனாகிய மில்கோமையும் பணிந்துகொண்டு, அவன் தகப்பனாகிய தாவீதைப்போல என் பார்வைக்குச் செம்மையாய் இருக்கிறதைச் செய்யவும், என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கȠΕ்கொள்ளவுமύ, அவர்கள் என் வழிகளில் நடவாமற்ʠχானபடிϠοனால் அப்படிச் செய்வேன்.

2 Kings 23:12
யூதாவின் ராஜாக்கள் உண்டாக்கினதும், ஆகாசுடைய மேல்வீட்டில் இருந்ததுமான பலிபீடங்களையும், மனாசே கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் உண்டாக்கின பலிபீடங்களையும் ராஜா இடித்து, அவைகளின்; தூளை அங்கேயிருந்து எடுத்துக் கீதரோன் ஆற்றில் கொட்டினான்.

2 Kings 17:41
அப்படியே அந்த ஜாதிகள் கர்த்தருக்குப் பயந்தும், தங்கள் விக்கிரகங்களைச் சேவித்தும் வந்தார்கள்; அவர்கள் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளின் பிள்ளைகளும் தங்கள் பிதாக்கள் செய்தபடியே இந்நாள்வரைக்கும் செய்துவருகிறார்கள்.

2 Kings 17:33
அப்படியே கர்த்தருக்குப் பயந்தும், தாங்கள் விட்டுவந்த ஜாதிகளுடைய முறைமையின்படியே தங்கள் தேவர்களைச் சேவித்தும் வந்தார்கள்.

1 Kings 18:21
அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.

Romans 14:11
அந்தப்படி: முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன் என்பதாய்க் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.

Matthew 6:24
இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.

Amos 5:26
நீங்கள் உங்களுக்கு உண்டாக்கின மோளேகுடைய கூடாரத்தையும், உங்கள் தேவர்களின் நட்சத்திர ராசியாகிய உங்கள் சொரூபங்களின் சப்பரத்தையும் சுமந்துகொண்டுவந்தீர்களே.

Hosea 4:15
இஸ்ரவேலே, நீ சோரம்போனாலும், யூதாவாகிலும் அந்தப் பாவத்துக்குள்ளாகாதிருப்பதாக; கில்காலுக்கு வராமலும், பெத்தாவேனுக்குப் போகாமலும் கர்த்தருடைய ஜீவனாணை என்று ஆணையிடாமலும் இருப்பீர்களாக.

Jeremiah 32:29
இந்த நகரத்துக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிற கல்தேயர் உட்பிரவேசித்து, இந்த நகரத்தைத் தீக்கொளுத்தி, இதைச் சுட்டெரிப்பார்கள்; எனக்குக் கோபமுண்டாக்கும்படி எந்த வீடுகளின்மேல் பாகாலுக்குத் தூபங்காட்டி, அந்நிய தேவர்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளையும் சுட்டெரிப்பார்கள்.

Jeremiah 5:7
இவைகளை நான் உனக்கு மன்னிப்பது எப்படி? உன் பிள்ளைகள் என்னை விட்டுவிட்டு, தெய்வம் அல்லாதவைகள்பேரில் ஆணையிடுகிறார்கள்; நான் திருப்தியாக்கின அவர்கள் விபசாரம்பண்ணி வேசிவீட்டிலே கூட்டங்கூடுகிறார்கள்

Jeremiah 4:2
நீ உண்மையோடும், நியாயத்தோடும், நீதியோடும், கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுவாய்; புறஜாதிகளும் அவருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டு, அவருக்குள் மேன்மைபாராட்டுவார்கள்.

Isaiah 48:1
இஸ்ரவேலென்னும் பெயர்பெற்று, யூதாவின் நீரூற்றிலிருந்து சுரந்தவர்களும், கர்த்தருடைய நாமத்தின்மேல் ஆணையிட்டு, உண்மையும் நீதியும் இல்லாமல் இஸ்ரவேலின் தேவனை அறிக்கையிடுகிறவர்களுமான யாக்கோபின் வம்சத்தாரே, கேளுங்கள்.

Isaiah 45:23
முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக்கொண்டே ஆணையிட்டிருக்கிறேன்; இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார்.

Isaiah 44:5
ஒருவன், நான் கர்த்தருடையவன் என்பான்; ஒருவன் யாக்கோபின்பேரைத் தரித்துக்கொள்வான்; ஒருவன், தான் கர்த்தருடையவன் என்று கையெழுத்துப்போட்டு, இஸ்ரவேலின் நாமத்தைத் தரித்துக்கொள்வான்.

1 Kings 11:5
சாலொமோன் சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும், அம்மோனியரின் அருவருப்பாகிய மில்கோமையும் பின்பற்றினான்.

Joshua 23:7
உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிற இந்த ஜாதிகளோடு கலவாமலும், அவர்களுடைய தேவர்களின் பேரை நினையாமலும், அவைகளைக்கொண்டு ஆணையிடாமலும், அவைகளைச் சேவியாமலும், பணிந்துகொள்ளாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள்.

Deuteronomy 10:20
உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவருடைய நாமத்தைக்கொண்டு ஆணையிடுவாயாக.


Tags வீடுகளின்மேல் வானசேனையைப் பணிகிறவர்களையும் கர்த்தர்பேரில் ஆணையிட்டு மல்காமின்பேரிலும் ஆணையிட்டுப் பணிகிறவர்களையும்
செப்பனியா 1:5 Concordance செப்பனியா 1:5 Interlinear செப்பனியா 1:5 Image