சங்கீதம் 143:7
கர்த்தாவே, சீக்கிரமாய் எனக்குச் செவிகொடும், என் ஆவி தொய்ந்துபோகிது; நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, உமது முகத்தை எனக்கு மறையாதேயும்.
Tamil Indian Revised Version
கர்த்தாவே, சீக்கிரமாக எனக்குச் செவிகொடும், என்னுடைய ஆவி சோர்ந்து போகிறது; நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, உமது முகத்தை எனக்கு மறைக்காமல் இரும்.
Tamil Easy Reading Version
விரையும், கர்த்தாவே, எனக்கு பதில் தாரும். நான் என் தைரியத்தை இழந்தேன். என்னிடமிருந்து அகன்று திரும்பிவிடாதேயும். கல்லறையில் மாண்டுகிடக்கும் மரித்தோரைப்போன்று நான் மரிக்கவிடாதேயும்.
திருவிவிலியம்
⁽ஆண்டவரே! விரைவாக␢ எனக்குச் செவிசாய்த்தருளும்;␢ ஏனெனில், என் உள்ளம் உடைந்துவிட்டது;␢ என்னிடமிருந்து உம் முகத்தை␢ மறைத்துக் கொள்ளாதேயும்;␢ இல்லையெனில், படுகுழி செல்வோருள்␢ ஒருவராகிவிடுவேன்.⁾
King James Version (KJV)
Hear me speedily, O LORD: my spirit faileth: hide not thy face from me, lest I be like unto them that go down into the pit.
American Standard Version (ASV)
Make haste to answer me, O Jehovah; my spirit faileth: Hide not thy face from me, Lest I become like them that go down into the pit.
Bible in Basic English (BBE)
Be quick in answering me, O Lord, for the strength of my spirit is gone: let me see your face, so that I may not be like those who go down into the underworld.
Darby English Bible (DBY)
Answer me speedily, O Jehovah; my spirit faileth: hide not thy face from me, or I shall be like unto them that go down into the pit.
World English Bible (WEB)
Hurry to answer me, Yahweh. My spirit fails. Don’t hide your face from me, So that I don’t become like those who go down into the pit.
Young’s Literal Translation (YLT)
Haste, answer me, O Jehovah, My spirit hath been consumed, Hide not Thou Thy face from me, Or I have been compared with those going down `to’ the pit.
சங்கீதம் Psalm 143:7
கர்த்தாவே, சீக்கிரமாய் எனக்குச் செவிகொடும், என் ஆவி தொய்ந்துபோகிது; நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, உமது முகத்தை எனக்கு மறையாதேயும்.
Hear me speedily, O LORD: my spirit faileth: hide not thy face from me, lest I be like unto them that go down into the pit.
| מַ֘הֵ֤ר | mahēr | MA-HARE | |
| עֲנֵ֨נִי׀ | ʿănēnî | uh-NAY-nee | |
| יְהוָה֮ | yĕhwāh | yeh-VA | |
| כָּלְתָ֪ה | koltâ | kole-TA | |
| ר֫וּחִ֥י | rûḥî | ROO-HEE | |
| אַל | ʾal | al | |
| תַּסְתֵּ֣ר | tastēr | tahs-TARE | |
| פָּנֶ֣יךָ | pānêkā | pa-NAY-ha | |
| מִמֶּ֑נִּי | mimmennî | mee-MEH-nee | |
| וְ֝נִמְשַׁ֗לְתִּי | wĕnimšaltî | VEH-neem-SHAHL-tee | |
| עִם | ʿim | eem | |
| יֹ֥רְדֵי | yōrĕdê | YOH-reh-day | |
| בֽוֹר׃ | bôr | vore |
இணை வசனம்
Psalm 69:17
உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளும்.
Psalm 28:1
என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும், நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.
Psalm 27:9
உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடாதேயும்; நீரே எனக்குச் சகாயர்; என் இரட்சிப்பின் தேவனே, என்னை நெகிழவிடாமலும் என்னைக் கைவிடாமலும் இரும்.
Luke 21:26
வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.
Isaiah 57:16
நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே.
Isaiah 38:18
பாதாளம் உம்மைத் துதியாது, மரணம் உம்மைப் போற்றாது; குழியிலிறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை.
Isaiah 8:17
நானோ யாக்கோபின் குடும்பத்துக்குத் தமது முகத்தை மறைக்கிற கர்த்தருக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்.
Psalm 102:2
என் ஆபத்துநாளிலே உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; உமது செவியை என்னிடத்தில் சாயும்; நான் கூப்பிடுகிற நாளிலே எனக்குத் தீவிரமாய் உத்தரவு அருளிச்செய்யும்.
Psalm 88:10
மரித்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ? செத்துப்போன வீரர் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ? (சேலா.)
Psalm 88:4
நான் குழியில் இறங்குகிறவர்களோடு எண்ணப்பட்டு, பெலனற்ற மனுஷனைப் போலானேன்.
Psalm 84:2
என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.
Psalm 71:12
தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்; என் தேவனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும்.
Psalm 70:5
நானோ சிறுமையும் எளிமையுமானவன்; தேவனே, என்னிடத்தில் தீவிரமாய் வாரும்: நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தாவே, தாமதியாதேயும்.
Psalm 69:3
நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று.
Psalm 40:17
நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்; தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்; என் தேவனே, தாமதியாதேயும்.
Psalm 40:12
எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டது, என் அக்கிரமங்கள் என்னைத் தொடர்ந்துபிடித்தது, நான் நிமிர்ந்துபார்க்கக் கூடாதிருக்கிறது, அவைகள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறது, என் இருதயம் சோர்ந்துபோகிறது.
Psalm 22:24
உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும் தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.
Psalm 13:1
கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?
Tags கர்த்தாவே சீக்கிரமாய் எனக்குச் செவிகொடும் என் ஆவி தொய்ந்துபோகிது நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு உமது முகத்தை எனக்கு மறையாதேயும்
சங்கீதம் 143:7 Concordance சங்கீதம் 143:7 Interlinear சங்கீதம் 143:7 Image