ஓபதியா 1:3
கன்மலை வெடிப்புகளாகிய உன் உயர்ந்த ஸ்தானத்திலே குடியிருந்து, என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார் என்று உன் இருதயத்தில் சொல்லுகிறவனே, உன் இருதயத்தின் அகந்தை உன்னை மோசம்போக்குகிறது.
Tamil Indian Revised Version
கன்மலை வெடிப்புகளாகிய உன் உயர்ந்த பகுதியிலே குடியிருந்து, என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார் என்று உன் இருதயத்தில் சொல்லுகிறவனே, உன் இருதயத்தின் அகந்தை உன்னை ஏமாற்றுகிறது.
Tamil Easy Reading Version
உன் பெருமை உன்னை ஏமாற்றிவிட்டது. கன்மலை உச்சியிலுள்ள குகைகளில் நீ வசிக்கிறாய். உன் வீடு மலைகளின் உச்சியில் உள்ளது. எனவே நீ உனக்குள்ளேயே, ‘எவராலும் என்னைத் தரைக்குக் கொண்டு வரமுடியாது’” என்கிறாய்.
திருவிவிலியம்
⁽பாறை இடுக்குகளில் வாழ்பவனே! § உயரத்திலே குடியிருப்பை␢ அமைத்திருப்பவனே!␢ ‘என்னைத் தரை மட்டும்␢ தாழ்த்தக் கூடியவன் யார்?’ என␢ உள்ளத்தில் சொல்லிக் கொள்பவனே!␢ உன் இதயத்தின் இறுமாப்பு § உன்னை ஏமாற்றிவிட்டது.⁾
King James Version (KJV)
The pride of thine heart hath deceived thee, thou that dwellest in the clefts of the rock, whose habitation is high; that saith in his heart, Who shall bring me down to the ground?
American Standard Version (ASV)
The pride of thy heart hath deceived thee, O thou that dwellest in the clefts of the rock, whose habitation is high; that saith in his heart, Who shall bring me down to the ground?
Bible in Basic English (BBE)
You have been tricked by the pride of your heart, O you whose living-place is in the cracks of the rock, whose house is high up; who has said in his heart, Who will make me come down to earth?
Darby English Bible (DBY)
The pride of thy heart hath deceived thee, thou that dwellest in the clefts of the rock, whose habitation is high; — he that saith in his heart, Who shall bring me down to the ground?
World English Bible (WEB)
The pride of your heart has deceived you, you who dwell in the clefts of the rock, whose habitation is high, who says in his heart, ‘Who will bring me down to the ground?’
Young’s Literal Translation (YLT)
The pride of thy heart hath lifted thee up, O dweller in clifts of a rock, (A high place `is’ his habitation, He is saying in his heart, `Who doth bring me down `to’ earth?’)
ஓபதியா Obadiah 1:3
கன்மலை வெடிப்புகளாகிய உன் உயர்ந்த ஸ்தானத்திலே குடியிருந்து, என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார் என்று உன் இருதயத்தில் சொல்லுகிறவனே, உன் இருதயத்தின் அகந்தை உன்னை மோசம்போக்குகிறது.
The pride of thine heart hath deceived thee, thou that dwellest in the clefts of the rock, whose habitation is high; that saith in his heart, Who shall bring me down to the ground?
| זְד֤וֹן | zĕdôn | zeh-DONE | |
| לִבְּךָ֙ | libbĕkā | lee-beh-HA | |
| הִשִּׁיאֶ֔ךָ | hiššîʾekā | hee-shee-EH-ha | |
| שֹׁכְנִ֥י | šōkĕnî | shoh-heh-NEE | |
| בְחַגְוֵי | bĕḥagwê | veh-hahɡ-VAY | |
| סֶ֖לַע | selaʿ | SEH-la | |
| מְר֣וֹם | mĕrôm | meh-ROME | |
| שִׁבְתּ֑וֹ | šibtô | sheev-TOH | |
| אֹמֵ֣ר | ʾōmēr | oh-MARE | |
| בְּלִבּ֔וֹ | bĕlibbô | beh-LEE-boh | |
| מִ֥י | mî | mee | |
| יוֹרִדֵ֖נִי | yôridēnî | yoh-ree-DAY-nee | |
| אָֽרֶץ׃ | ʾāreṣ | AH-rets |
இணை வசனம்
Isaiah 14:13
நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,
Isaiah 16:6
மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகங்காரத்தையும், அவன் உக்கிரத்தையும் குறித்துக் கேட்டோம்; அவன் மெத்தப் பெருமைக்காரன்; ஆனாலும் அவன் வீம்பு செல்லாது.
Jeremiah 49:16
கன்மலை வெடிப்புகளில் வாசம் பண்ணி, மேடுகளின் உச்சியைப் பிடித்திருக்கிற உன்னால் உன் பயங்கரமும் உன் இருதயத்தின் அகந்தையும் உன்னை மோசம்போக்கிற்று; நீ கழுகைப்போல் உயரத்தில் உன் கூட்டைக் கட்டினாலும் அங்கேயிருந்து உன்னை விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Proverbs 29:23
மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்.
2 Kings 14:7
அவன் உப்புப் பள்ளத்தாக்கிலே ஏதோமியரின் பதினாயிரம்பேரை மடங்கடித்து, யுத்தஞ்செய்து சேலாவைப் பிடித்து, அதற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிற யொக்தியேல் என்னும் பேரைத்தரித்தான்.
Revelation 18:7
அவள் தன்னை மகிமைப்படுத்தி, செல்வச்செருக்காய் வாழ்ந்ததெவ்வளவோ அவ்வளவாய் வாதையையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள். நான் ராஜஸ்திரீயாய் வீற்றிருக்கிறேன்; நான் கைம்பெண்ணல்ல, நான் துக்கத்தைக் காண்பதில்லையென்று அவள் தன் இருதயத்திலே எண்ணினாள்.
Malachi 1:4
ஏதோமியர்: நாம் எளிமைப்பட்டோம்: ஆனாலும் பாழானவைகளைத் திரும்பக் கட்டுவோம் என்று சொல்லுகிறார்கள்; அதற்குக் கர்த்தர்: அவர்கள் கட்டுவார்கள், நான் இடிப்பேன். அவர்கள் துன்மார்க்கத்தின் எல்லையென்றும், கர்த்தர் என்றைக்கும் சினம்வைக்கிற ஜனமென்றும் சொல்லப்படுவார்கள் என்கிறார்.
Jeremiah 49:4
எனக்கு விரோதமாய் வருகிறவன் யார் என்று சொல்லி, உன் செல்வத்தை நம்பின சீர்கெட்ட குமாரத்தியே, நீ பள்ளத்தாக்குகளைப்பற்றிப் பெருமை பாராட்டுவானேன்? உன் பள்ளத்தாக்கு கரைந்துபோகிறது.
Jeremiah 48:29
அவன் மெத்தப் பெருமைக்காரன், மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகந்தையையும், அவன் பெத்தரிக்கத்தையும், அவன் இருதயத்தின் மேட்டிமையையும் குறித்துக் கேட்டேன்.
Isaiah 47:7
என்றென்றைக்கும் நாயகியாயிருப்பேனென்று சொல்லி, இந்தக்காரியங்களை இதுவரைக்கும் உன் மனதிலே வையாமலும், அதின் முடிவை நினையாமலும் போனாய்.
Isaiah 10:14
ஒரு குருவிக்கூட்டைக் கண்டுபிடிக்கிறதுபோல என் கை ஜனங்களின் ஆஸ்தியைக் கண்டுபிடித்தது; விட்டுவிடப்பட்ட முட்டைகளை வாரிக்கொள்வதுபோல் பூமியையெல்லாம் நான் வாரிக்கொண்டேன்; ஒருவரும் செட்டையை அசைத்ததுமில்லை, வாயைத் திறந்ததுமில்லை, கீச்சென்று சத்தமிட்டதுமில்லை என்று சொல்லுகிறான்.
Proverbs 18:12
அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
Proverbs 16:18
அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.
2 Chronicles 25:12
யூதா புத்திரர், பதினாயிரம்பேரை உயிரோடு பிடித்து, ஒரு கன்மலையுச்சியிலே கொண்டுபோய், அவர்களெல்லாரும் நொறுங்கிப்போகத்தக்கதாய் அந்தக் கன்மலையுச்சியிலிருந்து கீழே தள்ளிவிட்டார்கள்.
Tags கன்மலை வெடிப்புகளாகிய உன் உயர்ந்த ஸ்தானத்திலே குடியிருந்து என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார் என்று உன் இருதயத்தில் சொல்லுகிறவனே உன் இருதயத்தின் அகந்தை உன்னை மோசம்போக்குகிறது
ஓபதியா 1:3 Concordance ஓபதியா 1:3 Interlinear ஓபதியா 1:3 Image