மீகா 4:13
சீயோன் குமாரத்தியே, நீ எழுந்து போரடி; நான் உன் கொம்புகளை இரும்பும், உன் குளம்புகளை வெண்கலமுமாக்குவேன்; நீ அநேக ஜனங்களை நொறுக்கிப்போடுவாய்; அவர்கள் தேடிச் சேர்த்ததை நீ கர்த்தருக்கென்றும் அவர்களுடைய ஆஸ்தியைப் பூமிக்கெல்லாம் ஆண்டவராயிருக்கிறவருக்கென்றும் நியமிப்பாய்.
Tamil Indian Revised Version
மகளாகிய சீயோனே, நீ எழுந்து போரடி; நான் உன் கொம்புகளை இரும்பும், உன் குளம்புகளை வெண்கலமுமாக்குவேன்; நீ அநேக மக்களை நொறுக்கிப்போடுவாய்; அவர்கள் தேடிச் சேர்த்ததை நீ கர்த்தருக்கென்றும், அவர்களுடைய சொத்துக்களை முழு பூமிக்கும் ஆண்டவராக இருக்கிறவருக்கென்றும் நியமிப்பாய்.
Tamil Easy Reading Version
“சீயோன் குமாரத்தியே, எழுந்து அந்த ஜனங்களை நசுக்கு. நான் உன்னைப் பலமுள்ளதாக்குவேன். உனக்கு இரும்பினாலான கொம்புகளும், வெண்கலத்தாலான குளம்புகள் உள்ளது போன்றும் இருக்கும். நீ பல மக்களை அடித்துச் சிறிய துண்டுகளாக்குவாய். அவர்களின் செல்வத்தை கர்த்தருக்குக் கொடுப்பாய். பூமிக்கெல்லாம் கர்த்தராய் இருப்பவர்க்கு அவர்களுடைய பொக்கிஷத்தை நீ கொடுப்பாய்”
திருவிவிலியம்
⁽மகள் சீயோனே, நீ எழுந்து புணையடி;␢ நான் உன் கொம்பை இரும்பாக மாற்றுவேன்;␢ உன்னுடைய குளம்புகளை␢ வெண்கலம் ஆக்குவேன்;␢ மக்களினங்கள் பலவற்றை␢ நீ நொறுக்கிப்போடுவாய்;␢ அவர்களிடம் கொள்ளையடித்தவற்றை␢ ஆண்டவருக்கு அர்ப்பணிப்பாய்;␢ அவர்களது செல்வங்களை␢ அனைத்துலகின் ஆண்டவரிடம்␢ ஒப்படைப்பாய்.”⁾
Title
இஸ்ரவேல் அதன் எதிரிகளைத் தோற்கடித்து வெல்லுவார்கள்
King James Version (KJV)
Arise and thresh, O daughter of Zion: for I will make thine horn iron, and I will make thy hoofs brass: and thou shalt beat in pieces many people: and I will consecrate their gain unto the LORD, and their substance unto the Lord of the whole earth.
American Standard Version (ASV)
Arise and thresh, O daughter of Zion; for I will make thy horn iron, and I will make thy hoofs brass; and thou shalt beat in pieces many peoples: and I will devote their gain unto Jehovah, and their substance unto the Lord of the whole earth.
Bible in Basic English (BBE)
Up! and let the grain be crushed, O daughter of Zion, for I will make your horn iron and your feet brass, and a number of peoples will be broken by you, and you will give up their increase to the Lord and their wealth to the Lord of all the earth.
Darby English Bible (DBY)
Arise and thresh, daughter of Zion, for I will make thy horn iron, and I will make thy hoofs brass; and thou shalt beat in pieces many peoples; and I will devote their gain to Jehovah, and their substance to the Lord of the whole earth.
World English Bible (WEB)
Arise and thresh, daughter of Zion; For I will make your horn iron, And I will make your hoofs brass; And you will beat in pieces many peoples: And I will devote their gain to Yahweh, And their substance to the Lord of the whole earth.
Young’s Literal Translation (YLT)
Arise, and thresh, O daughter of Zion, For thy horn I make iron, And thy hoofs I make brass, And thou hast beaten small many peoples, And I have devoted to Jehovah their gain, And their wealth to the Lord of the whole earth!
மீகா Micah 4:13
சீயோன் குமாரத்தியே, நீ எழுந்து போரடி; நான் உன் கொம்புகளை இரும்பும், உன் குளம்புகளை வெண்கலமுமாக்குவேன்; நீ அநேக ஜனங்களை நொறுக்கிப்போடுவாய்; அவர்கள் தேடிச் சேர்த்ததை நீ கர்த்தருக்கென்றும் அவர்களுடைய ஆஸ்தியைப் பூமிக்கெல்லாம் ஆண்டவராயிருக்கிறவருக்கென்றும் நியமிப்பாய்.
Arise and thresh, O daughter of Zion: for I will make thine horn iron, and I will make thy hoofs brass: and thou shalt beat in pieces many people: and I will consecrate their gain unto the LORD, and their substance unto the Lord of the whole earth.
| ק֧וּמִי | qûmî | KOO-mee | |
| וָד֣וֹשִׁי | wādôšî | va-DOH-shee | |
| בַת | bat | vaht | |
| צִיּ֗וֹן | ṣiyyôn | TSEE-yone | |
| כִּֽי | kî | kee | |
| קַרְנֵ֞ךְ | qarnēk | kahr-NAKE | |
| אָשִׂ֤ים | ʾāśîm | ah-SEEM | |
| בַּרְזֶל֙ | barzel | bahr-ZEL | |
| וּפַרְסֹתַ֙יִךְ֙ | ûparsōtayik | oo-fahr-soh-TA-yeek | |
| אָשִׂ֣ים | ʾāśîm | ah-SEEM | |
| נְחוּשָׁ֔ה | nĕḥûšâ | neh-hoo-SHA | |
| וַהֲדִקּ֖וֹת | wahădiqqôt | va-huh-DEE-kote | |
| עַמִּ֣ים | ʿammîm | ah-MEEM | |
| רַבִּ֑ים | rabbîm | ra-BEEM | |
| וְהַחֲרַמְתִּ֤י | wĕhaḥăramtî | veh-ha-huh-rahm-TEE | |
| לַֽיהוָה֙ | layhwāh | lai-VA | |
| בִּצְעָ֔ם | biṣʿām | beets-AM | |
| וְחֵילָ֖ם | wĕḥêlām | veh-hay-LAHM | |
| לַאֲד֥וֹן | laʾădôn | la-uh-DONE | |
| כָּל | kāl | kahl | |
| הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |
இணை வசனம்
Daniel 2:44
அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையில்பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்னையும் வெண்கலத்தையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.
Isaiah 23:18
அதின் வியாபாரமும், அதின் பணையமும் கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கப்படும்; அது பொக்கிஷமாய் சேர்க்கப்படுவதும் இல்லை; பூட்டி வைக்கப்படுவதும் இல்லை; கர்த்தருடைய சமுகத்தில் வாசமாயிருக்கிறவர்கள் திருப்தியாகச் சாப்பிடவும் நல்ல வஸ்திரங்களைத் தரிக்கவும் அதின் வியாபாரம் அவர்களைச் சேரும்.
Zechariah 4:14
அப்பொழுது அவர்; இவைகள் இரண்டும் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில் நிற்கிற அபிஷேகம் பெற்றவர்கள் என்றார்.
Zechariah 6:5
அந்தத் தூதன் எனக்குப் பிரதியுத்தரமாக: இவைகள் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய சமுகத்தில் நின்று புறப்படுகிற வானத்தினுடைய நாலு ஆவிகள் என்றார்.
Zechariah 9:13
நான் எனக்கென்று யூதாவை நாணேற்றி, எப்பிராயீமிலே வில்லை நிரப்பி, சீயோனே, உன் புத்திரரைக் கிரேக்குதேசப் புத்திரருக்கு விரோதமாக எழுப்பி, உன்னைப் பராக்கிரமசாலியின் பட்டயத்துக்கு ஒப்பாக்குவேன்.
Romans 15:25
இப்பொழுதோ பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்யுங்காரியமாக நான் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ண எத்தனமாயிருக்கிறேன்.
1 Corinthians 16:2
நான் வந்திருக்கும்போது பணஞ்சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.
Revelation 2:26
ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.
Revelation 21:24
இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள் பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்
Micah 5:8
யாக்கோபிலே மீதியானவர்கள், சிங்கம் காட்டுமிருகங்களுக்குள்ளே இருக்கிறதற்குச் சமானமாகவும் கடந்துபோய் மிதித்துத் தப்புவிப்பாரில்லாமல் பீறிப்போடுகிற பாலசிங்கம் ஆட்டுமந்தைகளுக்குள்ளே இருக்கிறதற்குச் சமானமாகவும் ஜாதிகளுக்குள் அநேக ஜனங்களின் நடுவிலே இருப்பார்கள்.
Jeremiah 51:33
பாபிலோன் குமாரத்தி மிதிக்கப்படுங் களத்துக்குச் சமானம்; அதைப்போரடிக்குங் காலம் வந்தது; இன்னும் கொஞ்சக்காலத்திலே அறுப்புக்காலம் அதற்கு வரும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Joshua 6:19
சகல வெள்ளியும் பொன்னும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களும், கர்த்தருக்குப் பரிசுத்தமானவைகள்; அவைகள் கர்த்தரின் பொக்கிஷத்தில் சேரும் என்றான்.
2 Samuel 8:10
ஆதாதேசர் தோயீயின்மேல் எப்போதும் யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தபடியால், ராஜாவாகிய தாவீதின் சுகசெய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாதேசரோடே யுத்தம்பண்ணி, அவனை முறிய அடித்ததற்காக அவனுக்கு வாழ்த்துதல் சொல்லவும், தோயீ தன் குமாரனாகிய யோராமை ராஜாவினிடத்தில் அனுப்பினான். மேலும் யோராம் தன் கையிலே வெள்ளியும் பொன்னும் வெண்கலமுமான தட்டுமுட்டுகளைக் கொண்டுவந்தான்.
Psalm 68:29
எருசலேமிலுள்ள உம்முடைய ஆலயத்தினிமித்தம், ராஜாக்கள் உமக்குக் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்.
Psalm 72:10
தர்ஷீசின் ராஜாக்களும் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள்.
Isaiah 5:28
அவர்கள் அம்புகள் கூர்மையும், அவர்கள் வில்லுகளெல்லாம் நாணேற்றினவைகளும், அவர்கள் குதிரைகளின் குளம்புகள் கற்பாறையாக எண்ணப்ட்டவைகளும், அவர்கள் உருளைகள் சுழல்காற்றுக்கு ஒத்தவைகளுமாயிருக்கும்.
Isaiah 18:7
அக்காலத்திலே நெடுந்தூரமாய்ப் பரவியிருக்கிறதும் சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் கெடியாயிருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான ஜாதியானது சேனைகளின் கர்த்தரின் நாமம் தங்கும் ஸ்தலமாகிய சீயோன் மலையில் சேனைகளின் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவரப்படும்.
Isaiah 41:15
இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்.
Isaiah 60:6
ஒட்டகங்களின் ஏராளமும், மீதியான ஏப்பாத் தேசங்களின் வேகமான ஒட்டகங்களும் உன்னை மூடும்; சேபாவிலுள்ளவர்கள் யாவரும் பொன்னையும் தூபவர்க்கத்தையும் கொண்டுவந்து, கர்த்தரின் துதிகளைப் பிரசித்தப்படுத்துவார்கள்.
Deuteronomy 33:25
இரும்பும் வெண்கலமும் உன் பாதரட்சையின் கீழிருக்கும், உன் நாட்களுக்குத்தக்கதாய் உன் பெலனும் இருக்கும் என்றான்.
Tags சீயோன் குமாரத்தியே நீ எழுந்து போரடி நான் உன் கொம்புகளை இரும்பும் உன் குளம்புகளை வெண்கலமுமாக்குவேன் நீ அநேக ஜனங்களை நொறுக்கிப்போடுவாய் அவர்கள் தேடிச் சேர்த்ததை நீ கர்த்தருக்கென்றும் அவர்களுடைய ஆஸ்தியைப் பூமிக்கெல்லாம் ஆண்டவராயிருக்கிறவருக்கென்றும் நியமிப்பாய்
மீகா 4:13 Concordance மீகா 4:13 Interlinear மீகா 4:13 Image