Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 13:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 13 மாற்கு 13:6

மாற்கு 13:6
ஏனெனில் அநேகர் வந்து, என் நாமத்தைக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.

Tamil Indian Revised Version
ஏனென்றால், அநேகர் வந்து, என் நாமத்தைச் சொல்லி: நானே கிறிஸ்து என்று, அநேகரை ஏமாற்றுவார்கள்.

Tamil Easy Reading Version
பலர் வந்து என் பெயரைப் பயன்படுத்துவார்கள். அவர்கள், ‘நானே அவர்’ என்பார்கள். அவர்கள் மக்களை ஏமாற்றுவார்கள்.

திருவிவிலியம்
ஏனெனில், பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ‘நானே அவர்’ என்று சொல்லிப் பலரை நெறிதவறச் செய்வர்.

Mark 13:5Mark 13Mark 13:7

King James Version (KJV)
For many shall come in my name, saying, I am Christ; and shall deceive many.

American Standard Version (ASV)
Many shall come in my name, saying, I am `he’; and shall lead many astray.

Bible in Basic English (BBE)
People will come in my name, saying, I am he; and a number will be turned from the true way.

Darby English Bible (DBY)
For many shall come in my name, saying, It is *I*, and shall mislead many.

World English Bible (WEB)
For many will come in my name, saying, ‘I am he!{Literally, “I AM!”}’ and will lead many astray.

Young’s Literal Translation (YLT)
for many shall come in my name, saying — I am `he’, and many they shall lead astray;

மாற்கு Mark 13:6
ஏனெனில் அநேகர் வந்து, என் நாமத்தைக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
For many shall come in my name, saying, I am Christ; and shall deceive many.

πολλοὶpolloipole-LOO
γὰρgargahr
ἐλεύσονταιeleusontaiay-LAYF-sone-tay
ἐπὶepiay-PEE
τῷtoh
ὀνόματίonomatioh-NOH-ma-TEE
μουmoumoo
λέγοντεςlegontesLAY-gone-tase
ὅτιhotiOH-tee
Ἐγώegōay-GOH
εἰμιeimiee-mee
καὶkaikay
πολλοὺςpollouspole-LOOS
πλανήσουσινplanēsousinpla-NAY-soo-seen

இணை வசனம்

Mark 13:22
ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.

Jeremiah 14:14
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: தீர்க்கதரிசிகள் என் நாமத்தைக்கொண்டு பொய்யாய்த் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள். நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை; அவர்களோடே பேசினதுமில்லை; அவர்கள் கள்ளத் தரிசனத்தையும், கள்ள சகுனத்தையும், இல்லாத விசேஷத்தையும், தங்கள் இருதயத்தின் கபடத்தையுமே, உங்களுக்குத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்கள்.

1 John 4:1
அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.

Acts 5:36
ஏனென்றால் இந்நாட்களுக்குமுன்னே தெயுதாஸ் என்பவன் எழும்பி, தன்னை ஒரு பெரியவனாகப் பாராட்டினான்; ஏறக்குறைய நானூறு பேர் அவனைச் சேர்ந்தார்கள்; அவன் மடிந்துபோனான்; அவனை நம்பின அனைவரும் சிதறி, அவமாய்ப்போனார்கள்.

John 8:24
ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்.

John 5:43
நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுய நாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள்.

Matthew 24:23
அப்பொழுது, இதோ கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள்.

Matthew 24:11
அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.

Matthew 24:5
ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.

Jeremiah 23:21
அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பாதிருந்தும் அவர்கள் ஓடினார்கள்; அவர்களோடே நான் பேசாதிருந்தும் அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.


Tags ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைக்கொண்டு நானே கிறிஸ்து என்று சொல்லி அநேகரை வஞ்சிப்பார்கள்
மாற்கு 13:6 Concordance மாற்கு 13:6 Interlinear மாற்கு 13:6 Image