Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 3:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 3 எரேமியா 3:22

எரேமியா 3:22
சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள்; உங்கள் சீர்கேடுகளைக் குணமாக்குவேன் என்றார். இதோ, உம்மிடத்தில் வருகிறோம்; நீரே எங்கள் தேவனாகிய கர்த்தர்

Tamil Indian Revised Version
ஒழுக்கம்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள்; உங்கள் ஒழுக்ககேடுகளைக் குணமாக்குவேன் என்றார். இதோ, உம்மிடத்தில் வருகிறோம்; நீரே எங்கள் தேவனாகிய கர்த்தர்.

Tamil Easy Reading Version
கர்த்தர் மேலும் இவ்வாறு சொன்னார்: “இஸ்ரவேல் ஜனங்களே, நீங்கள் என்மீது விசுவாசம் இல்லாமல் உள்ளீர்கள். ஆனால், என்னிடம் திரும்பி வாருங்கள்! என்னிடம் விசுவாசம் இல்லாமல் போனதற்கு நான் உங்களை மன்னிப்பேன். திரும்பி வாருங்கள்.” அதற்கு ஜனங்கள், “ஆம், நாங்கள் உம்மிடம் வருவோம். நீரே எங்களது தேவனாகிய கர்த்தர்.

திருவிவிலியம்
⁽என்னைவிட்டு விலகிய மக்களே!␢ திரும்பி வாருங்கள்;␢ உங்கள் நம்பிக்கையின்மையிலிருந்து␢ உங்களைக் குணமாக்குவேன்;␢ “இதோ நாங்கள் உம்மிடம் வருகிறோம்.␢ நீரே எங்கள் கடவுளாகிய ஆண்டவர்.⁾⒫

Jeremiah 3:21Jeremiah 3Jeremiah 3:23

King James Version (KJV)
Return, ye backsliding children, and I will heal your backslidings. Behold, we come unto thee; for thou art the LORD our God.

American Standard Version (ASV)
Return, ye backsliding children, I will heal your backslidings. Behold, we are come unto thee; for thou art Jehovah our God.

Bible in Basic English (BBE)
Come back, you children who have been turned away, and I will take away your desire for wandering. See, we have come to you, for you are the Lord our God.

Darby English Bible (DBY)
— Return, backsliding children; I will heal your backslidings. … Behold, we come unto thee; for thou art Jehovah our God.

World English Bible (WEB)
Return, you backsliding children, I will heal your backsliding. Behold, we are come to you; for you are Yahweh our God.

Young’s Literal Translation (YLT)
Turn back, O backsliding sons, I cause your backslidings to cease. — Behold us, we have come to Thee, For Thou `art’ Jehovah our God.

எரேமியா Jeremiah 3:22
சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள்; உங்கள் சீர்கேடுகளைக் குணமாக்குவேன் என்றார். இதோ, உம்மிடத்தில் வருகிறோம்; நீரே எங்கள் தேவனாகிய கர்த்தர்
Return, ye backsliding children, and I will heal your backslidings. Behold, we come unto thee; for thou art the LORD our God.

שׁ֚וּבוּšûbûSHOO-voo
בָּנִ֣יםbānîmba-NEEM
שׁוֹבָבִ֔יםšôbābîmshoh-va-VEEM
אֶרְפָּ֖הʾerpâer-PA
מְשׁוּבֹֽתֵיכֶ֑םmĕšûbōtêkemmeh-shoo-voh-tay-HEM
הִנְנוּ֙hinnûheen-NOO
אָתָ֣נוּʾātānûah-TA-noo
לָ֔ךְlāklahk
כִּ֥יkee
אַתָּ֖הʾattâah-TA
יְהוָֹ֥הyĕhôâyeh-hoh-AH
אֱלֹהֵֽינוּ׃ʾĕlōhênûay-loh-HAY-noo

இணை வசனம்

Hosea 14:4
நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களைவிட்டு நீங்கிற்று.

Zechariah 13:9
அந்த மூன்றாம் பங்கை நான் அக்கினிக்குட்படப்பண்ணி, வெள்ளியை உருக்குகிறதுபோல அவர்களை உருக்கி, பொன்னைப் புடமிடுகிறதுபோல அவர்களைப் புடமிடுவேன்; அவர்கள் என் நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்; நான் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பேன்; இது என்ஜனமென்று நான் சொல்லுவேன், கர்த்தர் என் தேவனென்று அவர்கள் சொல்லுவார்கள்.

Hosea 14:8
இனி எனக்கும் விக்கிரகங்களுக்கும் என்ன என்று எப்பிராயீம் சொல்லுவான்; நான் அவனுக்குச் செவிகொடுத்து, அவனால் நோக்கமாயிருந்தேன்; நான் பச்சையான தேவதாரு விருட்சம்போலிருக்கிறேன்; என்னாலே உன் கனியுண்டாயிற்று என்று எப்பிராயீம் சொல்லுவான்.

Hosea 14:1
இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய்.

Hosea 13:4
நான் உன்னை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவந்ததுமுதல் உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிறேன்; ஆகையால் நீ என்னையன்றி வேறே தேவனை அறியவேண்டாம்; என்னையன்றி இரட்சகர் ஒருவரும் இல்லை.

Hosea 6:1
கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மை குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்.

Hosea 3:5
பின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பி, தங்கள் தேவனாகிய கர்த்தரையும், தங்கள் ராஜாவாகிய தாவீதையும் தேடி, கடைசிநாட்களில் கர்த்தரையும், அவருடைய தயவையும் நாடி அஞ்சிக்கையாய் வருவார்கள்.

Jeremiah 33:6
இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன்.

Jeremiah 31:18
நீர் என்னைத் தண்டித்தீர், நான் பணியாத மாடுபோல் அடிக்கப்பட்டேன்; என்னைத் திருப்பும், அப்பொழுது திருப்பப்படுவேன்; நீரே என் தேவனாகிய கர்த்தர்.

Jeremiah 30:17
அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Isaiah 27:8
தேவரீர் ஜனத்தைத் துரத்திவிடுகையில் மட்டாய் அதனோடே வழக்காடுகிறீர்; கொண்டல்காற்றடிக்கிற நாளிலே அவர் தம்முடைய கடுங்காற்றினால் அதை விலக்கிவிடுகிறார்.

Song of Solomon 1:4
என்னை இழுத்துக்கொள்ளும் உமக்குப் பின்னே ஓடி வருவோம்; ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டுவந்தார்; நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்; திராட்சரசத்தைப் பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம்; உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.


Tags சீர்கெட்ட பிள்ளைகளே திரும்புங்கள் உங்கள் சீர்கேடுகளைக் குணமாக்குவேன் என்றார் இதோ உம்மிடத்தில் வருகிறோம் நீரே எங்கள் தேவனாகிய கர்த்தர்
எரேமியா 3:22 Concordance எரேமியா 3:22 Interlinear எரேமியா 3:22 Image