ஓசியா 10:1
இஸ்ரவேல் பலனற்ற திராட்சச்செடி, அது தனக்குத்தானே கனிகொடுக்கிறது; அவன் தன் கனியின் திரளுக்குச் சரியாய்ப் பலிபீடங்களைத் திரளாக்குகிறான்; தங்கள் தேசத்தின் செழிப்புக்குச் சரியாய்ச் சிறப்பான படங்களைச் சிலைகளைச் செய்கிறார்கள்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேல் பலனற்ற திராட்சைச்செடி, அது தனக்குத்தானே பழங்களைக் கொடுக்கிறது; அவன் தன் பழங்களின் பெருக்கத்திற்குச் சரியாகப் பலிபீடங்களை அதிகமாக்குகிறான்; தங்கள் தேசத்தின் செழிப்பிற்குச் சரியாகச் சிறப்பான சிலைகளைச் செய்கிறார்கள்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஏராளமாகக் கனிகளைக் கொடுக்கிற திராட்சைக்கொடியைப் போன்றவன். ஆனால் இஸ்ரவேல் மேலும் மேலும் மிகுதியாகப் பொருட்களைப் பெற்றதும் அந்நிய தெய்வங்களைக் கௌரவிக்க மென்மேலும் பலிபீடங்களைக் கட்டினான். அவனுடைய நாடு மேலும் மேலும் வளம் பெற்றது. ஆகவே அவன் மேலும் மேலும் அந்நிய தெய்வத்தை கௌரவிக்கக் கற்களை அமைத்தான்.
திருவிவிலியம்
⁽இஸ்ரயேல் தழைத்து வளர்ந்த␢ திராட்சைக்கொடி, அது மிகுதியான␢ கனிகளைத்␢ தனக்கே தாங்கி நிற்கின்றது;␢ எவ்வளவு மிகுதியாகக்␢ கனிகளைக் கொடுத்ததோ,␢ அவ்வளவு மிகுதியாய்ப்␢ பலிபீடங்களை அமைத்தது;␢ எத்தகைய சிறப்புடன்␢ நாடு செழிப்புற்றதோ,␢ அதற்கு இணையாய்ச்␢ சிலைத் தூண்கள்␢ சிறப்புப் பெற்றன.⁾
Title
இஸ்ரவேலின் செல்வமே, விக்கிரகத் தொழுகைக்கு வழி நடத்தியது
Other Title
இஸ்ரயேலின் உண்மையற்ற இதயம்
King James Version (KJV)
Israel is an empty vine, he bringeth forth fruit unto himself: according to the multitude of his fruit he hath increased the altars; according to the goodness of his land they have made goodly images.
American Standard Version (ASV)
Israel is a luxuriant vine, that putteth forth his fruit: according to the abundance of his fruit he hath multiplied his altars; according to the goodness of their land they have made goodly pillars.
Bible in Basic English (BBE)
Israel is a branching vine, full of fruit; as his fruit is increased, so the number of his altars is increased; as the land is fair, so they have made fair pillars.
Darby English Bible (DBY)
Israel is an unpruned vine, he bringeth forth fruit unto himself: according to the abundance of his fruit he hath multiplied altars; according to the goodness of his land they have made goodly statues.
World English Bible (WEB)
Israel is a luxuriant vine that puts forth his fruit. According to the abundance of his fruit he has multiplied his altars. As their land has prospered, they have adorned their sacred stones.
Young’s Literal Translation (YLT)
`An empty vine `is’ Israel, Fruit he maketh like to himself, According to the abundance of his fruit, He hath multiplied for the altars, According to the goodness of his land, They have made goodly standing-pillars.
ஓசியா Hosea 10:1
இஸ்ரவேல் பலனற்ற திராட்சச்செடி, அது தனக்குத்தானே கனிகொடுக்கிறது; அவன் தன் கனியின் திரளுக்குச் சரியாய்ப் பலிபீடங்களைத் திரளாக்குகிறான்; தங்கள் தேசத்தின் செழிப்புக்குச் சரியாய்ச் சிறப்பான படங்களைச் சிலைகளைச் செய்கிறார்கள்.
Israel is an empty vine, he bringeth forth fruit unto himself: according to the multitude of his fruit he hath increased the altars; according to the goodness of his land they have made goodly images.
| גֶּ֤פֶן | gepen | ɡEH-fen | |
| בּוֹקֵק֙ | bôqēq | boh-KAKE | |
| יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| פְּרִ֖י | pĕrî | peh-REE | |
| יְשַׁוֶּה | yĕšawwe | yeh-sha-WEH | |
| לּ֑וֹ | lô | loh | |
| כְּרֹ֣ב | kĕrōb | keh-ROVE | |
| לְפִרְי֗וֹ | lĕpiryô | leh-feer-YOH | |
| הִרְבָּה֙ | hirbāh | heer-BA | |
| לַֽמִּזְבְּח֔וֹת | lammizbĕḥôt | la-meez-beh-HOTE | |
| כְּט֣וֹב | kĕṭôb | keh-TOVE | |
| לְאַרְצ֔וֹ | lĕʾarṣô | leh-ar-TSOH | |
| הֵיטִ֖יבוּ | hêṭîbû | hay-TEE-voo | |
| מַצֵּבֽוֹת׃ | maṣṣēbôt | ma-tsay-VOTE |
இணை வசனம்
Hosea 8:11
எப்பிராயீம் பாவஞ்செய்வதற்கேதுவாய் பலிபீடங்களைப் பெருகப்பண்ணினார்கள்; ஆதலால் பலிபீடங்களே அவர்கள் பாவஞ்செய்வதற்கு ஏதுவாகும்.
Hosea 12:11
கீலχயாத் அக்கிரம ஸ்தலமோ? ஆம், அவர்கள் அபத்தரானார்கள்; கில்காலிலே காளைகளைப் பலியிடுகிறார்கள்; அவர்களுடைய பீடங்கள் வயல்வரப்புகளிலிருக்கிற கற்குவியல்களைப்போல் இருக்கிறது.
Isaiah 5:1
இப்பொழுது நான் என் நேசரிடத்தில் அவருடைய திராட்சத்தோட்டத்தைக் குறித்து என் நேசருக்கேற்ற ஒரு பாட்டைப் பாடுவேன்; என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சத்தோட்டம் உண்டு.
Ezekiel 15:1
கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
Jeremiah 2:28
நீ உனக்கு உண்டுபண்ணின தேவர்கள் எங்கே உன் ஆபத்துக்காலத்தில் உன்னை இரட்சிக்கக்கூடுமானால் அவைகள் எழும்பட்டும்; யூதாவே, உன் பட்டணங்களின் இலக்கமும், உன் தேவர்களின் இலக்கமும் சரி.
1 Kings 14:23
அவர்களும் உயர்ந்த சகல மேட்டின் மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும், மேடைகளையும் சிலைகளையும் தோப்பு விக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டாக்கினார்கள்.
Leviticus 26:1
நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும்பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
Philippians 2:21
மற்றவர்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள்.
2 Corinthians 5:16
ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.
Romans 14:7
நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதுமில்லை.
John 15:1
நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர்.
Zechariah 7:5
நீ தேசத்தின் எல்லா ஜனத்தோடும் ஆசாரியர்களோடும் சொல்லவேண்டியது என்னவென்றால், நீங்கள் இந்த எழுபது வருஷமாக ஐந்தாம் மாதத்திலும் ஏழாம் மாதத்திலும் உபாவாசம்பண்ணி துக்கங்கொண்டாடினபோது நீங்கள் எனக்கென்றுதானா உபவாசம்பண்ணினீர்கள்.
Nahum 2:2
வெறுமையாக்குகிறவர்கள் அவர்களை வெறுமையாக்கி, அவர்களுடைய திராட்சக்கொடிகளைக் கெடுத்துப்போட்டாலும், கர்த்தர் யாக்கோபின் மகிமையைத் திரும்பிவரப்பண்ணுவது போல், இஸ்ரவேலின் மகிமையையும் திரும்பிவரப்பண்ணுவார்.
Hosea 13:6
தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள்; திருப்தியானபின்பு அவர்கள் இருதயம் மேட்டிமையாயிற்று; அதினால் என்னை மறந்தார்கள்.
Hosea 13:2
இப்போதும் அவர்கள் அதிகமதிகமாய்ப் பாவஞ்செய்து, தங்கள் வெள்ளியினால் வார்ப்பித்த சுரூபங்களையும், தங்கள் புத்திக்கேற்க விக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டுபண்ணுகிறார்கள்; இவைகளெல்லாம் தட்டாருடைய வேலை; மனுஷரில் பலியிடுகிறவர்கள் கன்றுக்குட்டிகளைத் முத்தமிடலாமென்று இவைகளைக்குறித்துச் சொல்லுகிறார்கள்.
Hosea 12:8
எப்பிராயீம்: நான் ஐசுவரியவானானேன்; நான் பொருளைச் சம்பாதித்தேன்; நான் பிரயாசப்பட்டுத் தேடின எல்லாவற்றிலும் பாவமாகிய அக்கிரமம் என்னிடத்தில் கண்டுபிடிக்கப்படுவதில்லையென்று சொல்லுகிறான்.
Hosea 8:4
அவர்கள் ராஜாக்களை ஏற்படுத்திக்கொண்டார்கள், ஆனாலும் என்னாலே அல்ல; அதிபதிகளை வைத்துக்கொண்டார்கள், ஆனாலும் நான் அறியேன்; அவர்கள் வேரறுப்புண்டு போகும்படித் தங்கள் வெள்ளியினாலும் தங்கள் பொன்னினாலும் தங்களுக்கு விக்கிரகங்களைச் செய்வித்தார்கள்.
Hosea 2:8
தனக்கு நான் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தவரென்றும், தனக்கு நான் வெள்ளியையும் பொன்னையும் பெருகப்பண்ணினவரென்றும் அவள் அறியாமற்போனாள்; அவைகளை அவர்கள் பாகாலுடையதாக்கினார்கள்.
Tags இஸ்ரவேல் பலனற்ற திராட்சச்செடி அது தனக்குத்தானே கனிகொடுக்கிறது அவன் தன் கனியின் திரளுக்குச் சரியாய்ப் பலிபீடங்களைத் திரளாக்குகிறான் தங்கள் தேசத்தின் செழிப்புக்குச் சரியாய்ச் சிறப்பான படங்களைச் சிலைகளைச் செய்கிறார்கள்
ஓசியா 10:1 Concordance ஓசியா 10:1 Interlinear ஓசியா 10:1 Image